• Nov 26 2024

சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட தகவல்

Chithra / Mar 4th 2024, 7:47 am
image

 

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை குறித்து போலியான தகவல்கள் பரவியதை அடுத்தே செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எம் கே சிவாஜிலிங்கம் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான வழக்கொன்றின் தீர்ப்புக்காக கடந்த வியாழக்கிழமை அவர் கொழும்பு திரும்பியிருந்தார்.

அந்த வழக்கில் நீதிமன்றம் அவரை நிரபராதி என்று தெரிவித்து விடுதலை செய்திருந்தது.

அதனையடுத்து, சென்னை திரும்பிய சிவாஜிலிங்கத்திற்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் வடபழனி விஜயா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட தகவல்  தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை குறித்து போலியான தகவல்கள் பரவியதை அடுத்தே செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.எம் கே சிவாஜிலிங்கம் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான வழக்கொன்றின் தீர்ப்புக்காக கடந்த வியாழக்கிழமை அவர் கொழும்பு திரும்பியிருந்தார்.அந்த வழக்கில் நீதிமன்றம் அவரை நிரபராதி என்று தெரிவித்து விடுதலை செய்திருந்தது.அதனையடுத்து, சென்னை திரும்பிய சிவாஜிலிங்கத்திற்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் வடபழனி விஜயா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement