ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த குணதிலக ராஜபக்ச தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மோதலில் காயமடைந்த அவருக்கு மூன்றரை மணிநேர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் முடிவில் ஏற்பட்ட மோதலில் குணதிலக்க ராஜபக்ச தாக்கப்பட்டுள்ளார்.
மோதலில் காயமடைந்த குணதிலக்க ராஜபக்ச கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினருக்கு சத்திரசிகிச்சை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த குணதிலக ராஜபக்ச தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த மோதலில் காயமடைந்த அவருக்கு மூன்றரை மணிநேர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.ஆளும் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் முடிவில் ஏற்பட்ட மோதலில் குணதிலக்க ராஜபக்ச தாக்கப்பட்டுள்ளார்.மோதலில் காயமடைந்த குணதிலக்க ராஜபக்ச கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.