• Oct 31 2024

முல்லைத்தீவில் ஒருநாள் சிசுவை கொன்ற தாய்க்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..! samugammedia

Chithra / Oct 17th 2023, 1:32 pm
image

Advertisement

 

பிறந்து ஒருயொரு நாளான சிசுவை படு​கொலை செய்த சிசுவின் தாய்க்கு, ஐந்து வருடகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்  பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு  பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03ம்  திகதியன்று பிறந்து ஒரு நாள் வயதுடைய குழந்தை ஒன்றினை கொலை செய்த குற்றச்சாட்டில்  அச்சிசுவின் தாய், புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அந்த தாய்க்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில்  வழக்கு தொடரப்பட்டது.   

அதன்பின்னர்  சட்டமா அதிபரினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்றில் மேல்நீதிமன்ற நீதிபதி   ஏ.எம்.ஏ சகாப்தீன்   முன்னிலையில் தீர்ப்புகாக  கடந்த வாரம்   எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சிசுவைக் கொலைசெய்த குற்றத்திற்காக ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டதுடன் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது. 

தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில்  12 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்கவும் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


முல்லைத்தீவில் ஒருநாள் சிசுவை கொன்ற தாய்க்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு. samugammedia  பிறந்து ஒருயொரு நாளான சிசுவை படு​கொலை செய்த சிசுவின் தாய்க்கு, ஐந்து வருடகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு  பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03ம்  திகதியன்று பிறந்து ஒரு நாள் வயதுடைய குழந்தை ஒன்றினை கொலை செய்த குற்றச்சாட்டில்  அச்சிசுவின் தாய், புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.அந்த தாய்க்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில்  வழக்கு தொடரப்பட்டது.   அதன்பின்னர்  சட்டமா அதிபரினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.இந்நிலையில், குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்றில் மேல்நீதிமன்ற நீதிபதி   ஏ.எம்.ஏ சகாப்தீன்   முன்னிலையில் தீர்ப்புகாக  கடந்த வாரம்   எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போது சிசுவைக் கொலைசெய்த குற்றத்திற்காக ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டதுடன் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது. தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில்  12 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்கவும் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement