முல்லைத்தீவு தியோகு நகரில் அவலோன் நிறுவனத்தின் அடாவடியை எதிர்த்து பொதுமக்கள் போராடியமை தொடர்பான வழக்கு வியாழக்கிழமை (05) நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முல்லைத்தீவு - தியோகு நகர்ப் பகுதியில் கடந்த 26.05.2024 அன்று கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குரிய மக்கள் பயன்பாட்டிலுள்ள வீதியை அவலோன் எனப்படும் தனியார் நிறுவனம் அடாவடியாக வேலியிட்டு தடுத்தமையால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அடாவடியாக வீதியை தடுத்து அமைக்கப்பட்ட வேலியையும் அப்புறப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு 20.06.2024 அன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த விவகாரங்களுடன் தொடர்புடைய முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன், பீற்றர் இளஞ்செழியன், தியோகு நகர் கிராமமக்கள், அவலோன் நிறுவன முகாமையாளர் உள்ளிட்டவர்களை சொந்தப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக 05.09.2024 என திகதியிடப்பட்டிருந்தது.
அதனையடுத்து, இன்றைய தினம் இந்த வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தரணிகள் வாதாடி 12.12.2024 என்கிற திகதிக்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.
1983ஆம் ஆண்டுக்கு முற்பட்டே தியோகு நகர் கிராமம் உருவாக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கே வசித்து வருகின்றன. இவர்களின் வாழ்வாதாரம் கடற்றொழிலாகும். இக்கிராமம் உருவாக்கப்பட்டது தொடக்கம் கடலுக்கு செல்லும் பாதை அக்கிராமத்தினூடாகவே அமைக்கப்பட்டு பயன்பாட்டிலுள்ளது.
திடீரென தனியார் நிறுவனம் இது தங்களுடைய காணி என உரிமை கோரி மக்கள் அப்பாதையூடாக கடற்கரைக்கு செல்லாதவாறு பாதையை மறித்ததன் பின்னரே மக்கள் போராடி வீதித்தடையை அகற்றியிருந்தார்கள்.
அதனையடுத்து, இந்த கிராமத்துடன் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் விரைந்து, அது பிரதேச சபைக்கு சொந்தமான வீதி என கடிதம் வழங்கியிருந்தார்கள். ஆனால், தனியார் நிறுவனத்தினர் மக்கள் மீதும் இந்த கிராம காணி தமக்கானது என கூறியும் முறைப்பாடு செய்ததோடு வழக்கொன்றும் பதிவுசெய்திருந்தனர்.
இந்த வழக்கு முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக சேவகர் பீற்றர் இளஞ்செழியன், கிராம மக்கள் உட்பட 13 நபர்களுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் தவணையிடப்பட்டது முல்லைத்தீவு தியோகு நகர் வழக்கு முல்லைத்தீவு தியோகு நகரில் அவலோன் நிறுவனத்தின் அடாவடியை எதிர்த்து பொதுமக்கள் போராடியமை தொடர்பான வழக்கு வியாழக்கிழமை (05) நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.முல்லைத்தீவு - தியோகு நகர்ப் பகுதியில் கடந்த 26.05.2024 அன்று கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குரிய மக்கள் பயன்பாட்டிலுள்ள வீதியை அவலோன் எனப்படும் தனியார் நிறுவனம் அடாவடியாக வேலியிட்டு தடுத்தமையால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அடாவடியாக வீதியை தடுத்து அமைக்கப்பட்ட வேலியையும் அப்புறப்படுத்தியிருந்தனர். இந்நிலையில், இது தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு 20.06.2024 அன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த விவகாரங்களுடன் தொடர்புடைய முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன், பீற்றர் இளஞ்செழியன், தியோகு நகர் கிராமமக்கள், அவலோன் நிறுவன முகாமையாளர் உள்ளிட்டவர்களை சொந்தப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக 05.09.2024 என திகதியிடப்பட்டிருந்தது.அதனையடுத்து, இன்றைய தினம் இந்த வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தரணிகள் வாதாடி 12.12.2024 என்கிற திகதிக்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.1983ஆம் ஆண்டுக்கு முற்பட்டே தியோகு நகர் கிராமம் உருவாக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கே வசித்து வருகின்றன. இவர்களின் வாழ்வாதாரம் கடற்றொழிலாகும். இக்கிராமம் உருவாக்கப்பட்டது தொடக்கம் கடலுக்கு செல்லும் பாதை அக்கிராமத்தினூடாகவே அமைக்கப்பட்டு பயன்பாட்டிலுள்ளது. திடீரென தனியார் நிறுவனம் இது தங்களுடைய காணி என உரிமை கோரி மக்கள் அப்பாதையூடாக கடற்கரைக்கு செல்லாதவாறு பாதையை மறித்ததன் பின்னரே மக்கள் போராடி வீதித்தடையை அகற்றியிருந்தார்கள்.அதனையடுத்து, இந்த கிராமத்துடன் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் விரைந்து, அது பிரதேச சபைக்கு சொந்தமான வீதி என கடிதம் வழங்கியிருந்தார்கள். ஆனால், தனியார் நிறுவனத்தினர் மக்கள் மீதும் இந்த கிராம காணி தமக்கானது என கூறியும் முறைப்பாடு செய்ததோடு வழக்கொன்றும் பதிவுசெய்திருந்தனர். இந்த வழக்கு முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக சேவகர் பீற்றர் இளஞ்செழியன், கிராம மக்கள் உட்பட 13 நபர்களுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.