• May 18 2025

தாயக செயலணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு..!

Sharmi / May 17th 2025, 9:36 pm
image

தாயக செயலணியின் ஏற்பாட்டில் 'மறக்குமா மே-18' என்ற தலைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று(17) வாகரை பால்சேனையில் பிரதான வீதியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

பொதுச்சுடரினை மாவீரர் ஒருவரின் தாயார்  ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

இன,மத பேதமின்றி வீதியால் சென்ற பொதுமக்கள் அதனை அருந்தினார்கள். 

வருடா வருடம் தாயக செயலணியினரால் இவ் நினைவேந்தல் நிகழ்வு நினைவு கூரப்படுவது வழக்கமாகும்.

இன்று கொட்டும் மழை என்றும் பாராமல் இவ் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 



தாயக செயலணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு. தாயக செயலணியின் ஏற்பாட்டில் 'மறக்குமா மே-18' என்ற தலைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று(17) வாகரை பால்சேனையில் பிரதான வீதியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.பொதுச்சுடரினை மாவீரர் ஒருவரின் தாயார்  ஏற்றி வைத்தார்.அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கப்பட்டது.இன,மத பேதமின்றி வீதியால் சென்ற பொதுமக்கள் அதனை அருந்தினார்கள். வருடா வருடம் தாயக செயலணியினரால் இவ் நினைவேந்தல் நிகழ்வு நினைவு கூரப்படுவது வழக்கமாகும்.இன்று கொட்டும் மழை என்றும் பாராமல் இவ் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement