தமிழினப் படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகிறது.
அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள் பொருளாதார தடைகளென மக்களுக்கு உணவு மருந்து எதுவுமே கிடைக்கவிடாது தடுத்து உச்சக் கட்ட தாக்குதல்களை நடத்திய போது மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக மாறியிருந்தது
இதனை விடவும் இந்த கஞ்சியை பெற்றுக் கொள்ள வரிசையில் நின்றவர்கள் மீது கூட திட்டமிட்டு அரசு நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.
இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கு சொல்லவும் எதிர்கால சந்ததிக்கு இந்த வரலாறுகளை எடுத்து சொல்லவும் இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையில் தமிழினப் படுகொலை வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று வற்றாப்பளை இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வற்றாப்பளை பாடசாலை சந்தியில் வைத்து இறுதி உயிரை காப்பாற்ற உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சியானது இன்றைய தினம்(16) வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
'வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி' வற்றாப்பளையில் வழங்கிவைப்பு. தமிழினப் படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகிறது.அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள் பொருளாதார தடைகளென மக்களுக்கு உணவு மருந்து எதுவுமே கிடைக்கவிடாது தடுத்து உச்சக் கட்ட தாக்குதல்களை நடத்திய போது மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக மாறியிருந்ததுஇதனை விடவும் இந்த கஞ்சியை பெற்றுக் கொள்ள வரிசையில் நின்றவர்கள் மீது கூட திட்டமிட்டு அரசு நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கு சொல்லவும் எதிர்கால சந்ததிக்கு இந்த வரலாறுகளை எடுத்து சொல்லவும் இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.அந்தவகையில் தமிழினப் படுகொலை வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று வற்றாப்பளை இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வற்றாப்பளை பாடசாலை சந்தியில் வைத்து இறுதி உயிரை காப்பாற்ற உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சியானது இன்றைய தினம்(16) வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.