• Dec 25 2024

நள்ளிரவில் நடமாடும் மர்ம நபர்கள்...! அச்சத்தில் உறைந்த மக்கள்...! மாயமான பணம்...!

Sharmi / Mar 2nd 2024, 3:46 pm
image

மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிலும் பேருந்து தரிப்பிட வீதியிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் சூறையாடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று(01)  நள்ளிரவில்  இடம்பெற்றுள்ளது.

மேலும்,  இது குறித்து சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளதுடன் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

அத்துடன்,  இச் சம்பவம் குறித்து நகரில் உள்ள CCTV கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்ட பின்னர்,  சந்தேக நபர் கறுப்பு நிற உடை அணிந்து முகத்தை மூடிக் கொண்டு செல்வதை காணக் கூடியதாக உள்ளது எனவும் சந்தேகத்திற்கிடமான  நபர்கள் பற்றிய விவரங்கள் திரட்டும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நள்ளிரவில் நடமாடும் மர்ம நபர்கள். அச்சத்தில் உறைந்த மக்கள். மாயமான பணம். மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிலும் பேருந்து தரிப்பிட வீதியிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் சூறையாடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்று(01)  நள்ளிரவில்  இடம்பெற்றுள்ளது.மேலும்,  இது குறித்து சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளதுடன் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.அத்துடன்,  இச் சம்பவம் குறித்து நகரில் உள்ள CCTV கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்ட பின்னர்,  சந்தேக நபர் கறுப்பு நிற உடை அணிந்து முகத்தை மூடிக் கொண்டு செல்வதை காணக் கூடியதாக உள்ளது எனவும் சந்தேகத்திற்கிடமான  நபர்கள் பற்றிய விவரங்கள் திரட்டும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement