• Sep 21 2024

தீர்த்தமாடி அருட்காட்சி கொடுத்த நல்லூர்க் கந்தன்- பக்திப் பரவசத்தில் பக்தர்கள் கூட்டம்..!

Sharmi / Sep 2nd 2024, 12:56 pm
image

Advertisement

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம் ஷண்முக புஸ்கரணி தீர்த்த கேணியில் இன்று(02) காலை இடம்பெற்றது.

விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை, ஸ்தம்ப பூஜை என்பன இடம்பெற்று ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக பிள்ளையார் மற்றும் சண்டேஷ்வரருடன் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

வௌ்ளி எலி வாகனத்தில் பிள்ளையாரும், வௌ்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமானும், வெள்ளி எருது வாகனத்தில் சண்டேஷ்வரரும் வெளிமயில் மற்றும் வெள்ளி அன்ன வாகனங்களில் வள்ளி, தெய்வானை ஆகியோரும் வீதி வலம் வந்தனர்.

தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை பல  அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும்,  காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர்.

இந்நிலையில், நாளையதினம் பூங்காவனமும் நடைபெற்று வைரவர் உற்சவத்துடன் மகோற்சவ பெருவிழா நிறைவு பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


தீர்த்தமாடி அருட்காட்சி கொடுத்த நல்லூர்க் கந்தன்- பக்திப் பரவசத்தில் பக்தர்கள் கூட்டம். வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம் ஷண்முக புஸ்கரணி தீர்த்த கேணியில் இன்று(02) காலை இடம்பெற்றது.விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை, ஸ்தம்ப பூஜை என்பன இடம்பெற்று ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக பிள்ளையார் மற்றும் சண்டேஷ்வரருடன் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.வௌ்ளி எலி வாகனத்தில் பிள்ளையாரும், வௌ்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமானும், வெள்ளி எருது வாகனத்தில் சண்டேஷ்வரரும் வெளிமயில் மற்றும் வெள்ளி அன்ன வாகனங்களில் வள்ளி, தெய்வானை ஆகியோரும் வீதி வலம் வந்தனர்.தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.அதேவேளை பல  அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும்,  காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர்.இந்நிலையில், நாளையதினம் பூங்காவனமும் நடைபெற்று வைரவர் உற்சவத்துடன் மகோற்சவ பெருவிழா நிறைவு பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement