• Oct 30 2024

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதம் - பிள்ளையானின் கருத்து தொடர்பில் விசாரணை கோரும் நாமல்

Chithra / Jun 30th 2024, 4:28 pm
image

Advertisement


விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதம் வழங்கப்பட்டமை குறித்து இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடவில் இடம்பெற்ற கட்சி மாநாட்டின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கூறியது போன்று எந்தவொரு அரசியல் கட்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியிருந்தால் அது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்  என தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த நிகழ்வில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதம் - பிள்ளையானின் கருத்து தொடர்பில் விசாரணை கோரும் நாமல் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதம் வழங்கப்பட்டமை குறித்து இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கிரிபத்கொடவில் இடம்பெற்ற கட்சி மாநாட்டின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கூறியது போன்று எந்தவொரு அரசியல் கட்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியிருந்தால் அது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்  என தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிகழ்வில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement