ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷ இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய வேட்பாளரையே பொதுஜன பெரமுன களமிறக்கும்.
அதேவேளை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கானபொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவை கோரவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், அது தொடர்பான தீர்மானத்தை கட்சியே எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் இளைஞராகவோ அல்லது நடுத்தர வயதுடையவராகவோ இருக்கலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகும் நாமல். மஹிந்த வழங்கிய அட்வைஸ். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷ இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய வேட்பாளரையே பொதுஜன பெரமுன களமிறக்கும்.அதேவேளை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவை கோரவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.எவ்வாறாயினும், அது தொடர்பான தீர்மானத்தை கட்சியே எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.அதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் இளைஞராகவோ அல்லது நடுத்தர வயதுடையவராகவோ இருக்கலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.