• Nov 28 2024

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச...!samugammedia

Sharmi / Dec 20th 2023, 12:26 pm
image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நியமிக்குமாறு கட்சியின் பெரும் பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். 


இந்நிலையில் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் பொதுஜன பெரமுன கட்சியின் பதவி நிலைகளில் மாற்றம் ஏற்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



அதேவேளை, பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திலிருந்து பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் கட்சியின் பதவிகளில் அங்கம் வகிக்கின்றனர்.


ஆகவே விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம் எனவும் அழைப்பு விடுத்தார்.


அதேவேளை பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானமும்  எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.



பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச.samugammedia ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நியமிக்குமாறு கட்சியின் பெரும் பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இந்நிலையில் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் பொதுஜன பெரமுன கட்சியின் பதவி நிலைகளில் மாற்றம் ஏற்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.அதேவேளை, பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திலிருந்து பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் கட்சியின் பதவிகளில் அங்கம் வகிக்கின்றனர்.ஆகவே விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம் எனவும் அழைப்பு விடுத்தார்.அதேவேளை பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானமும்  எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement