• Apr 13 2025

இந்தியாவில் மோடி கலந்துகொள்ளும் மாநாட்டில் இன்று உரையாற்றும் நாமல்

Chithra / Apr 8th 2025, 11:48 am
image

 

இந்தியாவில் நடைபெறும் 'ரைசிங் பாரதம்'  மாநாட்டில் இன்று ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பாராளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்றார். 

தெற்காசிய பிராந்தியத்திற்கான வளர்ச்சிக்கான  பட்டியல் (The South Asian Platter: Menu for Growth) என்ற தொனிப்பொருளில்  இந்த மாநாடு இடம்பெற்றுவருகின்றது. 

வளர்ந்து வரும் இளம் தலைவர்களின் கண்ணோட்டத்தில் பிராந்திய வளர்ச்சியை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு, கடந்த காலத் தலைமைத்துவ அனுபவங்களுடனும், எதிர்காலத்திற்கான அவர்களின் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடன்  கலந்துரையாடவுள்ளனர்.

இந்த மாநாட்டில் இன்றையதினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் விசேட உரையாற்றவுள்ளார்.

அத்துடன், மாலைதீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் உசா மரியா தீதி, பிரபல இந்திய நடிகை கஜோல் உட்பட பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பலர்  உரையாற்றவுள்ளனர்.


இந்தியாவில் மோடி கலந்துகொள்ளும் மாநாட்டில் இன்று உரையாற்றும் நாமல்  இந்தியாவில் நடைபெறும் 'ரைசிங் பாரதம்'  மாநாட்டில் இன்று ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பாராளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்றார். தெற்காசிய பிராந்தியத்திற்கான வளர்ச்சிக்கான  பட்டியல் (The South Asian Platter: Menu for Growth) என்ற தொனிப்பொருளில்  இந்த மாநாடு இடம்பெற்றுவருகின்றது. வளர்ந்து வரும் இளம் தலைவர்களின் கண்ணோட்டத்தில் பிராந்திய வளர்ச்சியை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு, கடந்த காலத் தலைமைத்துவ அனுபவங்களுடனும், எதிர்காலத்திற்கான அவர்களின் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடன்  கலந்துரையாடவுள்ளனர்.இந்த மாநாட்டில் இன்றையதினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் விசேட உரையாற்றவுள்ளார்.அத்துடன், மாலைதீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் உசா மரியா தீதி, பிரபல இந்திய நடிகை கஜோல் உட்பட பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பலர்  உரையாற்றவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement