தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி, இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக மண்டியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணொளி வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், குறித்த காணொளியை தமது எக்ஸ் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,
இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடன் இணைந்து உடனடியாக குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் போரின் விளைவாக எந்தவொரு இளைஞரினதும் எதிர்காலம் மறுக்கப்படக்கூடாது எனவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்குத் தாம் தயாராகவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அனுப்புமாறு கோரிய இளைஞனை நாட்டுக்கு அழைத்து வர நாமல் வலியுறுத்தல் தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி, இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக மண்டியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணொளி வெளியாகியுள்ளன.இந்தநிலையில், குறித்த காணொளியை தமது எக்ஸ் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடன் இணைந்து உடனடியாக குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அத்துடன் போரின் விளைவாக எந்தவொரு இளைஞரினதும் எதிர்காலம் மறுக்கப்படக்கூடாது எனவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்குத் தாம் தயாராகவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.