• Dec 24 2024

தேசிய அருங்கலைகள் பேரவைக்கு புதிய தலைவர் நியமனம்!

Chithra / Dec 23rd 2024, 2:50 pm
image

 

தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவராக நாகரீக வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் நிபுணரான கலாநிதி ஆயிஷா விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

கலாநிதி ஆயிஷா விக்கிரமசிங்க மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக 2006 ஆம் ஆண்டு முதல் நகரீக ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.

இலங்கை, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து பிராண்ட் விளம்பரம் மற்றும் வடிவமைப்பில் விரிவான தொழில்முறை அனுபவத்தை கொண்டுள்ளார்.

காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான கலாநிதி விக்கிரமசிங்க மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் முதல் தரத்தில் பட்டம் பெற்றார்.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அருங்கலைகள் பேரவையின் உள்ளூர் கைவினைத் துறையை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

தேசிய அருங்கலைகள் பேரவைக்கு புதிய தலைவர் நியமனம்  தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவராக நாகரீக வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் நிபுணரான கலாநிதி ஆயிஷா விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கான நியமனக் கடிதத்தை கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.கலாநிதி ஆயிஷா விக்கிரமசிங்க மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக 2006 ஆம் ஆண்டு முதல் நகரீக ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.இலங்கை, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து பிராண்ட் விளம்பரம் மற்றும் வடிவமைப்பில் விரிவான தொழில்முறை அனுபவத்தை கொண்டுள்ளார்.காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான கலாநிதி விக்கிரமசிங்க மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் முதல் தரத்தில் பட்டம் பெற்றார்.கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அருங்கலைகள் பேரவையின் உள்ளூர் கைவினைத் துறையை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

Advertisement

Advertisement

Advertisement