• Nov 09 2026

கிண்ணியாவில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!

Ziya / Nov 9th 2026, 4:59 pm
image

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், முதலாம் நாள் டெங்கு ஒழிப்பு பரிசோதனை மற்றும் சிரமதானப் பணிகள் இன்று (09) கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்டன.


கிண்ணியா கட்டையாறு கிராம சேவகர் பிரிவில் இந்த டெங்கு பரிசோதனையும் துப்புரவு பணிகளும் இடம் பெற்றன.


கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம். அஜித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச டெங்கு ஒழிப்புப் பிரிவினர், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேச இளைஞர்கள் இணைந்து கொண்டனர்.


இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார வைத்திய அதிகாரி, கடந்த பத்து மாத காலப்பகுதியில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 48 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


எனினும், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


சுகாதாரத் துறையினரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல்களை நாளாந்தம் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்றும், நீர் தேங்கக்கூடிய இடங்களை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


மேலும், டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான வகையில் சுற்றுச்சூழலை வைத்திருப்போருக்கு எதிராக எவ்வித தயவுதாட்சண்யமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

கிண்ணியாவில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், முதலாம் நாள் டெங்கு ஒழிப்பு பரிசோதனை மற்றும் சிரமதானப் பணிகள் இன்று (09) கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்டன.கிண்ணியா கட்டையாறு கிராம சேவகர் பிரிவில் இந்த டெங்கு பரிசோதனையும் துப்புரவு பணிகளும் இடம் பெற்றன.கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம். அஜித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச டெங்கு ஒழிப்புப் பிரிவினர், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேச இளைஞர்கள் இணைந்து கொண்டனர்.இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார வைத்திய அதிகாரி, கடந்த பத்து மாத காலப்பகுதியில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 48 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.எனினும், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.சுகாதாரத் துறையினரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல்களை நாளாந்தம் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்றும், நீர் தேங்கக்கூடிய இடங்களை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.மேலும், டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான வகையில் சுற்றுச்சூழலை வைத்திருப்போருக்கு எதிராக எவ்வித தயவுதாட்சண்யமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement