• Mar 14 2025

திருகோணமலையில் 13 உள்ளூராட்சி மன்றங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும்! ரொஷான் எம்.பி.

Chithra / Mar 14th 2025, 3:58 pm
image

 

திருகோணமலை மாவட்டத்தின் 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் திருகோணமலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (14) செலுத்தப்பட்டது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

திருகோணமலை மாநகர சபை, கிண்ணியா நகர சபை, மூதூர், குச்சவெளி, கிண்ணியா, தம்பலகாமம, திருகோணமலை பட்டணமும் சூழலும், கந்தளாய் , சேருவில, மொறவெவ, வெருகல், பதவிசிறிபுர மற்றும் கோமராங்கடவெல ஆகிய பிரதேசிய சபைகளுக்குமே கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், 

கடந்த இரு தேர்தல்களிலும் நாட்டை வெற்றி கொண்டோம். இப்போது கிராமத்தை வெற்றி

கொள்வதற்காக இன்று கட்டுப்பணம் செலுத்தியிருக்கிறோம்.

இந்த நிலையில், மாவட்டத்தின் 13 உள்ளூராட்சி மன்றங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்பது உறுதியாகிவிட்டது.

இன, மத, அரசியல் பேதங்களை கடந்து, தற்போது அரசாங்கம் மக்களுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கிருக்கிறது. 

நாட்டுக்குத் தேவையான விடயத்தை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். சிறுபான்மை இன மக்களும், அவர்களின் உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு தருவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும்  தெரிவித்தார்.  

இந்த நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா பிரதேச அமைப்பாளர் எம்.ஈ . முகமட் ராபிக்  மற்றும் மூதூர் பிரதேச அமைப்பாளர் முஹம்மது ஷப்ரான் ஆகியோரும் பங்கேற்றியிருந்தனர்.


திருகோணமலையில் 13 உள்ளூராட்சி மன்றங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் ரொஷான் எம்.பி.  திருகோணமலை மாவட்டத்தின் 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் திருகோணமலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (14) செலுத்தப்பட்டது.திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.திருகோணமலை மாநகர சபை, கிண்ணியா நகர சபை, மூதூர், குச்சவெளி, கிண்ணியா, தம்பலகாமம, திருகோணமலை பட்டணமும் சூழலும், கந்தளாய் , சேருவில, மொறவெவ, வெருகல், பதவிசிறிபுர மற்றும் கோமராங்கடவெல ஆகிய பிரதேசிய சபைகளுக்குமே கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.இதன் பின்னர் ஊடகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், கடந்த இரு தேர்தல்களிலும் நாட்டை வெற்றி கொண்டோம். இப்போது கிராமத்தை வெற்றிகொள்வதற்காக இன்று கட்டுப்பணம் செலுத்தியிருக்கிறோம்.இந்த நிலையில், மாவட்டத்தின் 13 உள்ளூராட்சி மன்றங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்பது உறுதியாகிவிட்டது.இன, மத, அரசியல் பேதங்களை கடந்து, தற்போது அரசாங்கம் மக்களுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கிருக்கிறது. நாட்டுக்குத் தேவையான விடயத்தை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். சிறுபான்மை இன மக்களும், அவர்களின் உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு தருவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும்  தெரிவித்தார்.  இந்த நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா பிரதேச அமைப்பாளர் எம்.ஈ . முகமட் ராபிக்  மற்றும் மூதூர் பிரதேச அமைப்பாளர் முஹம்மது ஷப்ரான் ஆகியோரும் பங்கேற்றியிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement