ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியாக இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் மலையகத்திலும் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை அவதானிக்க முடிந்திருந்தது.
அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது.
அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் வட்டு மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திலும் பரீட்சை இடம்பெற்று வருகின்றது.
இதன்போது மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பரீட்சையில் கலந்து கொள்வதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை ஐந்தாந்தர புலமைப்பரிசில் பரீட்சை ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெறும் நிலையில் உடப்பு தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள்,ஶ்ரீ கிருஷ்ணா ஆரம்பப்பாடசாலை மாணவர்கள், ஒற்றைப்பனை றோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் பரீட்சைக்காக சென்றனர்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஆர்வத்துடன் வழியனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் திருகோணமலை - தோப்பூர் -அல்ஹம்றா மத்திய கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் அமைக்கப்பட்ட பரீட்சை நிலையத்திற்கு மாணவமாணவிகள் பரீட்சை எழுதுவதற்குச் சென்றதை காணமுடிந்தது.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் பரீட்சை எழுதும் மாணவர்களை வழியனுப்பி வைத்ததையும் காணமுடிந்தது.
நாடளாவிய ரீதியில் ஆரம்பமான புலமைப் பரிசில் பரீட்சை; பலப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியாக இடம்பெற்று வருகின்றது.அந்தவகையில் மலையகத்திலும் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை அவதானிக்க முடிந்திருந்தது.அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது.அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அந்தவகையில் யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் வட்டு மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திலும் பரீட்சை இடம்பெற்று வருகின்றது.இதன்போது மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பரீட்சையில் கலந்து கொள்வதை அவதானிக்க முடிந்தது.இதேவேளை ஐந்தாந்தர புலமைப்பரிசில் பரீட்சை ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெறும் நிலையில் உடப்பு தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள்,ஶ்ரீ கிருஷ்ணா ஆரம்பப்பாடசாலை மாணவர்கள், ஒற்றைப்பனை றோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் பரீட்சைக்காக சென்றனர்.பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஆர்வத்துடன் வழியனுப்பி வைத்தனர்.இந்நிலையில் திருகோணமலை - தோப்பூர் -அல்ஹம்றா மத்திய கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் அமைக்கப்பட்ட பரீட்சை நிலையத்திற்கு மாணவமாணவிகள் பரீட்சை எழுதுவதற்குச் சென்றதை காணமுடிந்தது.பெற்றோர்கள், ஆசிரியர்கள் பரீட்சை எழுதும் மாணவர்களை வழியனுப்பி வைத்ததையும் காணமுடிந்தது.