• Feb 05 2025

பேராயர் மல்கம் கர்தினாலை சந்தித்த கடற்படைத் தளபதி!

Chithra / Feb 5th 2025, 1:03 pm
image

 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட, கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால்  ரஞ்சித்தை சந்தித்து கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு அவரது ஆசிகளைப் பெற்றுள்ளார்.

கொழும்பில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கத்திற்கு கடற்படையின் பங்களிப்பைப் பாராட்டிய பேராயர், 

கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற கடற்படைத் தளபதிக்கும் கடற்படைக்கும் ஆசீர்வாதம் வழங்கினார்.

மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதி கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள விருந்தினர் புத்தகத்தில் குறிப்பை எழுதியதோடு, நினைவு சின்னமொன்றையும் பகிர்ந்து கொண்டார். 


பேராயர் மல்கம் கர்தினாலை சந்தித்த கடற்படைத் தளபதி  கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட, கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால்  ரஞ்சித்தை சந்தித்து கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு அவரது ஆசிகளைப் பெற்றுள்ளார்.கொழும்பில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.இந்தச் சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கத்திற்கு கடற்படையின் பங்களிப்பைப் பாராட்டிய பேராயர், கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற கடற்படைத் தளபதிக்கும் கடற்படைக்கும் ஆசீர்வாதம் வழங்கினார்.மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதி கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள விருந்தினர் புத்தகத்தில் குறிப்பை எழுதியதோடு, நினைவு சின்னமொன்றையும் பகிர்ந்து கொண்டார். 

Advertisement

Advertisement

Advertisement