• Nov 19 2024

புத்தளத்தில் தொடரும் கடற்படையினரின் வேட்டை- பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு!

Tamil nila / Sep 13th 2024, 11:10 pm
image

புத்தளம் , பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியின் கரம்பை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்றிலிருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று (12) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


நுரைச்சோலை பொலிஸாருடன் இணைந்து புத்தளம் - தம்பபண்ணி கடற்படையினர் குறித்த பகுதியில் சத்தேகத்திற்கிடமான முறையில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றை நிறுத்தி பரிசோதனை செய்துள்ளனர்.

குறித்த வேனுக்குள் 11 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 371 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்படடதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் கடற்படையினர் கூறினர்.

குறித்த பீடி இலைகளை கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.



இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் 371 கிலோ கிராம் பீடி இலைகள், வேன் என்பன   மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


புத்தளத்தில் தொடரும் கடற்படையினரின் வேட்டை- பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு புத்தளம் , பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியின் கரம்பை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்றிலிருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று (12) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.நுரைச்சோலை பொலிஸாருடன் இணைந்து புத்தளம் - தம்பபண்ணி கடற்படையினர் குறித்த பகுதியில் சத்தேகத்திற்கிடமான முறையில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றை நிறுத்தி பரிசோதனை செய்துள்ளனர்.குறித்த வேனுக்குள் 11 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 371 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்படடதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் கடற்படையினர் கூறினர்.குறித்த பீடி இலைகளை கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் 371 கிலோ கிராம் பீடி இலைகள், வேன் என்பன   மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement