• Jan 21 2025

ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் ஒருபோதும் இணையோம்- மஹிந்த திட்டவட்டம்..!

Sharmi / Sep 24th 2024, 8:42 pm
image

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கும் கூட்டணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணையாது என அக் கட்சியின் தலைவர் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (24) தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற அரசியல் பீட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளை, விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என நம்பப்படுவதால், அடிமட்ட அளவில் திட்டங்களை வகுத்து, கட்சி மீண்டும் வலுவான கட்சியாக உருவெடுக்கும் வகையில் செயல்படும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் ஒருபோதும் இணையோம்- மஹிந்த திட்டவட்டம். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கும் கூட்டணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணையாது என அக் கட்சியின் தலைவர் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (24) தெரிவித்துள்ளார்.பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற அரசியல் பீட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.அதேவேளை, விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என நம்பப்படுவதால், அடிமட்ட அளவில் திட்டங்களை வகுத்து, கட்சி மீண்டும் வலுவான கட்சியாக உருவெடுக்கும் வகையில் செயல்படும்.எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement