• Jun 02 2024

நெடுந்தீவு ஐவர் படுகொலை - சந்தேக நபரை 48 மணி நேர விசாரணைக்குட்படுத்த அனுமதி! samugammedia

Tamil nila / Apr 23rd 2023, 9:08 pm
image

Advertisement

நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான வயோதிப பெண்மணிக்கு கடும் காயங்களை விளைவித்து, கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபரை 48 மணிநேர பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்துறை நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.

நெடுந்தீவில் ஐவர் படுகொலை செய்ப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த வீட்டில் கடந்த இரு தினங்கள் தங்கியிருந்த 51 வயதான நபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொலையானவர்களின் நகைகள், கையடக்க தொலைபேசிகள் என உடமைகள் சில மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முற்படுத்திய பொலிஸார் 48 மணித்தியாலத்திற்கு தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி கோரினார்.

அதனை ஏற்றுக்கொண்ட மன்று, 48 மணிநேர விசாரணையின் பின் மன்றில் மீண்டும் சந்தேகநபரை முற்படுத்துமாறு பொலிஸாருக்கு பணித்தது.

நெடுந்தீவு ஐவர் படுகொலை - சந்தேக நபரை 48 மணி நேர விசாரணைக்குட்படுத்த அனுமதி samugammedia நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான வயோதிப பெண்மணிக்கு கடும் காயங்களை விளைவித்து, கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபரை 48 மணிநேர பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்துறை நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.நெடுந்தீவில் ஐவர் படுகொலை செய்ப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த வீட்டில் கடந்த இரு தினங்கள் தங்கியிருந்த 51 வயதான நபர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொலையானவர்களின் நகைகள், கையடக்க தொலைபேசிகள் என உடமைகள் சில மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.அந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முற்படுத்திய பொலிஸார் 48 மணித்தியாலத்திற்கு தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி கோரினார்.அதனை ஏற்றுக்கொண்ட மன்று, 48 மணிநேர விசாரணையின் பின் மன்றில் மீண்டும் சந்தேகநபரை முற்படுத்துமாறு பொலிஸாருக்கு பணித்தது.

Advertisement

Advertisement

Advertisement