• Nov 25 2024

மஹிந்த தலைமையில் ஆரம்பமாகவுள்ள பேச்சுவார்த்தை..!

Sharmi / Nov 23rd 2024, 10:12 am
image

கடந்த காலங்களில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பின்னர் பிரிந்து சென்ற உறுப்பினர்களை மீண்டும் இணைப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, பொதுஜன பெரமுனவில் இருந்து தற்போது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும், அக்கட்சியில் இருந்து விலகி ஏனைய கட்சிகளில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்றத்தில் ஒரே குழுவாக செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

அதேவேளை, பாராளுமன்றில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்தக் குழுவில் சேர்ப்பது குறித்து, மொட்டு கட்சி கவனம் செலுத்தி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த தலைமையில் ஆரம்பமாகவுள்ள பேச்சுவார்த்தை. கடந்த காலங்களில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பின்னர் பிரிந்து சென்ற உறுப்பினர்களை மீண்டும் இணைப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, பொதுஜன பெரமுனவில் இருந்து தற்போது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும், அக்கட்சியில் இருந்து விலகி ஏனைய கட்சிகளில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்றத்தில் ஒரே குழுவாக செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.அதேவேளை, பாராளுமன்றில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்தக் குழுவில் சேர்ப்பது குறித்து, மொட்டு கட்சி கவனம் செலுத்தி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement