அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், உலக கோடீஸ்வரர்களில் முன்னணியில் உள்ளவருமான எலான் மஸ்க் நிறுவிய, நியூராலிங்க் (Neuralink) நிறுவனம் மனித மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றின் செயற்பாடுகள் குறித்து உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சியை செய்ய தொடங்கப்பட்டது.
குறித்த நிறுவனத்தின் முதல் முயற்சியான மனிதரின் மூளையில் “சிப் பொருத்துதல்” வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை (FDA), நியூராலிங்க் நிறுவனத்திற்கு, மனித மூளையில் சிப் எனப்படும் மின்னணு சில்லுகளை பொருத்தி அவற்றின் மூலம் மனித மூளையின் திறனை மேம்படுத்தவும், நோய்களின்றி வாழ வழி செய்யவும் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
நியூராலிங்க் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோட்டின் துணையுடன், மிக துல்லியமாக நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சை முறையில் இந்த சிப் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது
முதற்கட்ட பரிசோதனைகளில் இந்த சிப்பில் இருந்து மின் சமிக்ஞைகளின் பரிமாற்றம் (electrical signal conduction) நடக்க தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். தனிப்பட்ட பங்குதாரர்களை கொண்டு மஸ்க் உருவாக்கியுள்ள நியூராலிங்க், தற்போது $5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கணினிக்கும் மனித மூளைக்கும் நேரடி தொடர்பு உண்டாக்கும் சிப் ஒன்றினை மனிதர் ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அவரது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், ஒரு நாளுக்கு முன்பாக நோயாளி ஒருவருக்கு சிப் பொருத்தப்பட்டதாகவும் அந்த நபர் முன்னேறி வருவதாகவும் மூளையின் செயல்பாடுகள் குறித்து நம்பிக்கையூட்டும் தரவுகள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நியூரோலிங் என்கிற அவரது நிறுவனம் இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது.
அத்துடன் எலான் மஸ்கின் குறித்த பதிவை பகிர்ந்த போதிலும் நியூரோலிங் சிப் பொருத்தப்பட்ட மனிதர் குறித்த மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.
அத்துடன் இந்த கண்டுபிடிப்புக்கு ‘டெலிபதி’ எனப் பெயரிட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவரது முதல் பயனர்களாக இருப்பர் என எலான் தெரிவித்துள்ளார்.
இந்த கருவிகள், எத்தனை தூரம் பயனர் இடைமுகமாக பயன்படும் என்பது குறித்தோ அல்லது எந்தளவுக்கு பாதுகாப்பானது என்பது குறித்தோ எந்த தகவலும் இல்லை.
இன்னும் 40-க்கும் அதிகமான நிறுவனங்கள் இதே தளத்தில் ஆய்வு செய்து வந்தபோதும் எலானின் நோக்கம் பலருக்கு விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள எலான் மஸ்க் மனிதர்கள் தங்களைச் சுற்றி நடப்பதை எப்போதும் பதிவு செய்துகொள்ள இந்த சிப் உதவும் எனத் தெரிவித்தார். இது மற்றவரின் தனியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் எனவும் பலர் விமர்சிதுள்ளளமை குறிப்பிடத்தக்கது
மனித மூளையில் சிப் சோதனையில் இறங்கிய நியூராலிங்க் நிறுவனம் .samugammedia அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், உலக கோடீஸ்வரர்களில் முன்னணியில் உள்ளவருமான எலான் மஸ்க் நிறுவிய, நியூராலிங்க் (Neuralink) நிறுவனம் மனித மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றின் செயற்பாடுகள் குறித்து உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சியை செய்ய தொடங்கப்பட்டது.குறித்த நிறுவனத்தின் முதல் முயற்சியான மனிதரின் மூளையில் “சிப் பொருத்துதல்” வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.கடந்த வருடம், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை (FDA), நியூராலிங்க் நிறுவனத்திற்கு, மனித மூளையில் சிப் எனப்படும் மின்னணு சில்லுகளை பொருத்தி அவற்றின் மூலம் மனித மூளையின் திறனை மேம்படுத்தவும், நோய்களின்றி வாழ வழி செய்யவும் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.நியூராலிங்க் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோட்டின் துணையுடன், மிக துல்லியமாக நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சை முறையில் இந்த சிப் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதுமுதற்கட்ட பரிசோதனைகளில் இந்த சிப்பில் இருந்து மின் சமிக்ஞைகளின் பரிமாற்றம் (electrical signal conduction) நடக்க தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். தனிப்பட்ட பங்குதாரர்களை கொண்டு மஸ்க் உருவாக்கியுள்ள நியூராலிங்க், தற்போது $5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.கணினிக்கும் மனித மூளைக்கும் நேரடி தொடர்பு உண்டாக்கும் சிப் ஒன்றினை மனிதர் ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அவரது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், ஒரு நாளுக்கு முன்பாக நோயாளி ஒருவருக்கு சிப் பொருத்தப்பட்டதாகவும் அந்த நபர் முன்னேறி வருவதாகவும் மூளையின் செயல்பாடுகள் குறித்து நம்பிக்கையூட்டும் தரவுகள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.நியூரோலிங் என்கிற அவரது நிறுவனம் இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் எலான் மஸ்கின் குறித்த பதிவை பகிர்ந்த போதிலும் நியூரோலிங் சிப் பொருத்தப்பட்ட மனிதர் குறித்த மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.அத்துடன் இந்த கண்டுபிடிப்புக்கு ‘டெலிபதி’ எனப் பெயரிட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவரது முதல் பயனர்களாக இருப்பர் என எலான் தெரிவித்துள்ளார்.இந்த கருவிகள், எத்தனை தூரம் பயனர் இடைமுகமாக பயன்படும் என்பது குறித்தோ அல்லது எந்தளவுக்கு பாதுகாப்பானது என்பது குறித்தோ எந்த தகவலும் இல்லை.இன்னும் 40-க்கும் அதிகமான நிறுவனங்கள் இதே தளத்தில் ஆய்வு செய்து வந்தபோதும் எலானின் நோக்கம் பலருக்கு விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள எலான் மஸ்க் மனிதர்கள் தங்களைச் சுற்றி நடப்பதை எப்போதும் பதிவு செய்துகொள்ள இந்த சிப் உதவும் எனத் தெரிவித்தார். இது மற்றவரின் தனியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் எனவும் பலர் விமர்சிதுள்ளளமை குறிப்பிடத்தக்கது