கடந்த அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் தற்போதுள்ள சட்டப் பின்னணியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயற்படுவதாகவும், விலைச்சூத்திரம் தொடர்பில் ஆராய்ந்து எதிர்காலத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வாய்மூல பதில்களை எதிர்பார்த்து கேட்ட கேள்விக்கு எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி சமர்ப்பித்த பதிலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 2 தடவைகள் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டு, விலைச் சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
எவ்வாறாயினும், எரிபொருள் விலை திருத்தத்திற்காக சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் இலாபம் அல்லது நட்டம் தொடர்பில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்ததன் நன்மை இந்த நாட்டில் எரிபொருளுக்கு உள்ளது.
நுகர்வோருக்கு மாதாந்திர எரிபொருள் விலை சீர்செய்யப்படும் எனவும் பதிலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்தில் புதிய திருத்தங்கள் - அநுர அரசு எடுத்த நடவடிக்கை கடந்த அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் தற்போதுள்ள சட்டப் பின்னணியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயற்படுவதாகவும், விலைச்சூத்திரம் தொடர்பில் ஆராய்ந்து எதிர்காலத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வாய்மூல பதில்களை எதிர்பார்த்து கேட்ட கேள்விக்கு எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி சமர்ப்பித்த பதிலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 2 தடவைகள் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டு, விலைச் சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.எவ்வாறாயினும், எரிபொருள் விலை திருத்தத்திற்காக சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் இலாபம் அல்லது நட்டம் தொடர்பில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கிடையில், உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்ததன் நன்மை இந்த நாட்டில் எரிபொருளுக்கு உள்ளது.நுகர்வோருக்கு மாதாந்திர எரிபொருள் விலை சீர்செய்யப்படும் எனவும் பதிலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.