• Oct 17 2024

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விவசாயத்தில் புதிய மாற்றம் - ஜனாதிபதி திட்டம்

Chithra / May 17th 2024, 4:11 pm
image

Advertisement



செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புதிய மாற்றத்திற்கு தயாராக உள்ள   தனியார் துறை தொழில்முனைவோருக்குத்  தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்காக 100 பிரதேச செயலாளர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்ட  பசுமை இல்லத்தை பார்வையிடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை (17) கேகாலை பகுதிக்கு சென்ற போதே ஜனாதிபதி இதனைத்  தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விவசாயத்தில் புதிய மாற்றம் - ஜனாதிபதி திட்டம் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.புதிய மாற்றத்திற்கு தயாராக உள்ள   தனியார் துறை தொழில்முனைவோருக்குத்  தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்காக 100 பிரதேச செயலாளர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்ட  பசுமை இல்லத்தை பார்வையிடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை (17) கேகாலை பகுதிக்கு சென்ற போதே ஜனாதிபதி இதனைத்  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement