புதிய மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் இந்த சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளது.
புதிய சட்டமூலத்துக்கு அமைய முன்னர் இருந்த, இலங்கை மின்சார சபையை 12 தனித்தனி நிறுவனங்களாகப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்ட விதிகள் நீக்கப்பட்டுள்ளன.
அதற்கு பதிலாக, திருத்தப்பட்ட சட்டமூலம் இலங்கை மின்சார சபையை நான்கு நிறுவனங்களாக மறுசீரமைக்க முன்மொழிகிறது.
இவை அனைத்தும் முழுமையாக அரசுக்குச் சொந்தமானதாக அமையும்.
வலுசக்தி துறையில் செயற்றிறன் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களின் விரைவு மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு புதிய மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் இந்த சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளது.புதிய சட்டமூலத்துக்கு அமைய முன்னர் இருந்த, இலங்கை மின்சார சபையை 12 தனித்தனி நிறுவனங்களாகப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்ட விதிகள் நீக்கப்பட்டுள்ளன.அதற்கு பதிலாக, திருத்தப்பட்ட சட்டமூலம் இலங்கை மின்சார சபையை நான்கு நிறுவனங்களாக மறுசீரமைக்க முன்மொழிகிறது.இவை அனைத்தும் முழுமையாக அரசுக்குச் சொந்தமானதாக அமையும்.வலுசக்தி துறையில் செயற்றிறன் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களின் விரைவு மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.