சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் நேற்று (11) இரவு பேரவையின் தலைமைக் கரியாலயத்தில் ஸுரா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் ஐ.எல்.எம். ரஹ்பி (ஹிழ்ரி) தலைமையிலும், ஸுரா சபையின் செயலாளர் எம்.சி.எம். ரிலாவின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வினை தலைமை தாங்கி நடாத்திய ஸுரா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் ஐ.எல்.எம் ரஹ்பி (ஹிழ்ரி) பேரவையின் களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கிய போது, இப்பிரதேசத்தில் எத்தனை இளைஞர்கள் இருந்தும் எம்மில் சிலரை மாத்திரம் இறைவன் தெரிவு செய்து இவ் உயரிய சேவையை வழங்குவதற்கு உருதுணையாக இருந்த இறைவனுக்கு முதற்கண் நன்றியினை தெரிவிப்பதோடு, நன்மையான காரியம் எதுவாக இருந்தாலும் ஆரம்பித்து வைத்தவர்களுக்கு மரணித்தாலும் உலகம் முடியும் காலம் வரை நன்மை வந்து கொண்டே இருக்கும்.
அந்தவகையில் எமது களப்பணியாளர்களின் சேவைக்கு இவ்வுலகில் எவ்வளவு ஊதியமாக வழங்கினாலும் ஈடாகாது எனவும் அறிவுரை வழங்கினார்.
சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்குள் பல்வேறு சமூக சேவை அமைப்புகள் கடந்த காலங்களில் காணப்பட்ட போதிலும் அவற்றினால் மக்களின் இறுதிக் கடமையாகிய ஜனாஸா கடமையைச் செவ்வனே நிறைவேற்ற கூடிய ஓர் அமைப்பு இல்லாமையை இட்டு கவலைப்பட்டனர்.
அதனை நிவர்த்தி செய்து எல்லோராலும் தேசிய ரீதியில் நன்மதிப்பை பெற்ற எமது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் சேவை அளப்பெரியது எனவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேரவையின் நடப்பாண்டுக்கான நிர்வாகத் தெரிவில் பின்வருவோர் சபையோரினால் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவராக எஸ்.எம். நசீர், பொதுச் செயலாளராக யூ.கே. காலித்தீன், பொருளாளராக ஏ.எச்.எம். முபின், உப தலைவர்களாக என்.எம். ஜெமின், ஏ.எம்.சப்கி, பிரதி தலைவர்களாக ஏ.எல். நியாஸ் ஹாஜி, எம்.சி.எம். ரிலா, உப செயலாளராக எல். நாசர், கணக்கு பரிசோதகராக எச்.எம் அமான் ஹாஜி ஆகியோரோடு, எம்.எம். ஹம்ஸா, ஐ.எல். இக்பால், எம்.ஏ.எம். அனஸ், என்.எம். சிராஜ், மற்றும் எம்.பஸ்லுன் ஆகியோர் நடப்பாண்டுக்கான நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.
சாய்ந்தமருது ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் நப்றாஸ் ஹனிபா (ரஹ்மானி) உட்பட உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கு புதிய நிர்வாக தெரிவு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் நேற்று (11) இரவு பேரவையின் தலைமைக் கரியாலயத்தில் ஸுரா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் ஐ.எல்.எம். ரஹ்பி (ஹிழ்ரி) தலைமையிலும், ஸுரா சபையின் செயலாளர் எம்.சி.எம். ரிலாவின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வினை தலைமை தாங்கி நடாத்திய ஸுரா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் ஐ.எல்.எம் ரஹ்பி (ஹிழ்ரி) பேரவையின் களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கிய போது, இப்பிரதேசத்தில் எத்தனை இளைஞர்கள் இருந்தும் எம்மில் சிலரை மாத்திரம் இறைவன் தெரிவு செய்து இவ் உயரிய சேவையை வழங்குவதற்கு உருதுணையாக இருந்த இறைவனுக்கு முதற்கண் நன்றியினை தெரிவிப்பதோடு, நன்மையான காரியம் எதுவாக இருந்தாலும் ஆரம்பித்து வைத்தவர்களுக்கு மரணித்தாலும் உலகம் முடியும் காலம் வரை நன்மை வந்து கொண்டே இருக்கும்.அந்தவகையில் எமது களப்பணியாளர்களின் சேவைக்கு இவ்வுலகில் எவ்வளவு ஊதியமாக வழங்கினாலும் ஈடாகாது எனவும் அறிவுரை வழங்கினார்.சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்குள் பல்வேறு சமூக சேவை அமைப்புகள் கடந்த காலங்களில் காணப்பட்ட போதிலும் அவற்றினால் மக்களின் இறுதிக் கடமையாகிய ஜனாஸா கடமையைச் செவ்வனே நிறைவேற்ற கூடிய ஓர் அமைப்பு இல்லாமையை இட்டு கவலைப்பட்டனர். அதனை நிவர்த்தி செய்து எல்லோராலும் தேசிய ரீதியில் நன்மதிப்பை பெற்ற எமது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் சேவை அளப்பெரியது எனவும் கூறினார்.அதனைத் தொடர்ந்து பேரவையின் நடப்பாண்டுக்கான நிர்வாகத் தெரிவில் பின்வருவோர் சபையோரினால் தெரிவு செய்யப்பட்டனர்.தலைவராக எஸ்.எம். நசீர், பொதுச் செயலாளராக யூ.கே. காலித்தீன், பொருளாளராக ஏ.எச்.எம். முபின், உப தலைவர்களாக என்.எம். ஜெமின், ஏ.எம்.சப்கி, பிரதி தலைவர்களாக ஏ.எல். நியாஸ் ஹாஜி, எம்.சி.எம். ரிலா, உப செயலாளராக எல். நாசர், கணக்கு பரிசோதகராக எச்.எம் அமான் ஹாஜி ஆகியோரோடு, எம்.எம். ஹம்ஸா, ஐ.எல். இக்பால், எம்.ஏ.எம். அனஸ், என்.எம். சிராஜ், மற்றும் எம்.பஸ்லுன் ஆகியோர் நடப்பாண்டுக்கான நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.சாய்ந்தமருது ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் நப்றாஸ் ஹனிபா (ரஹ்மானி) உட்பட உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.