• Nov 28 2024

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டம்...!samugammedia

Sharmi / Feb 3rd 2024, 10:17 am
image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி  அலுவலகத்தில் அமெரிக்க தூதுக்குழுவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது இதற்கான இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபர் ஆலோசகர், அதிபர் செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் தகவல்கள் இந்த அமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

அத்தகைய நபர்கள் நாட்டிற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முயன்றால் தானாக அடையாளம் காண முடியும்.  

ஒருவர் குற்றம் செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றால், அதை உடனடியாக இந்த எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு தடுக்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான எல்லைக் கட்டுப்பாட்டு முறைமையை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டம்.samugammedia கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.ஜனாதிபதி  அலுவலகத்தில் அமெரிக்க தூதுக்குழுவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது இதற்கான இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.இந்த சந்திப்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபர் ஆலோசகர், அதிபர் செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் தகவல்கள் இந்த அமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.அத்தகைய நபர்கள் நாட்டிற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முயன்றால் தானாக அடையாளம் காண முடியும்.  ஒருவர் குற்றம் செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றால், அதை உடனடியாக இந்த எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு தடுக்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது.இவ்வாறான எல்லைக் கட்டுப்பாட்டு முறைமையை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement