• Nov 17 2024

தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் யாப்பு உரையாடல்; ஏமாற்று நாடகம்- சபா.குகதாஸ்

Sharmi / Nov 8th 2024, 10:16 am
image

தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் யாப்பு என்ற உரையாடல் ஏமாற்று நாடகம் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கையில் முத்தரப்புப் போட்டியில் பெரும்பான்மை இல்லாமல் ஜனாதிபதி கதிரையை கைப்பற்றிய அநுரகுமார, பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை கைப்பற்ற கடந்த கால ஆட்சியாளர்கள் போன்று இனவாதத்தை கையில் எடுத்து தங்களின் உண்மை முகத்தை வெளிக்காட்ட தொடங்கி உள்ளனர்.

சமஸ்டி என்ற பேச்சுக்கு இடமில்லை என்ற வெளிவிகார அமைச்சர் விஐித ஹேரத்தின் நிலைப்பாடு ஒற்றையாட்சியை தாண்டி அதிகாரப் பகிர்வினை புதிய அரசியல் அமைப்பின் மூலம் வழங்க தயார் இல்லை என்றால் தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் யாப்பு என்ற உரையாடல் ஏமாற்று நாடகம்.

அதிகாரப்பகிர்வுக்கு இடம்  இல்லை என ரில்வின் சில்வா கூறியதும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் சில விடையங்களை மாற்றுவது பற்றி பேசுவதும் ஐ.நா மனிதவுரிமைப் பேரவையின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதும், யுத்த குற்ற ஆதாரங்களை சேகரிப்பதை ஏற்றுக் கொள்ளாமையும் , வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை எடுக்க முடியாது என கூறுவதும் மீனவர் பிரச்சினைக்கு தீர்க்க இந்தியாவை நோக்கி கை காட்டுவதும் கடந்த கால ஆட்சியாளரின் இனவாத செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவே ஜனாதிபதி அநுரகுமாரவின் நிலைப்பாடு வெளிப்பட ஆரம்பித்துள்ளது.

எனவே, தென்னிலங்கை மாற்றம் என்பது வடக்கு கிழக்கு மாகாண தமிழர்களுக்கு ஏமாற்றமாகவும் வெறுமனே ஆட்சிமாற்றம் அல்ல ஆள் மாற்றமாகவே மாறியுள்ளது.

இலங்கைத் தீவுக்குள் எரிந்து கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மாற்றம் என்ற கோசத்தில் நாட்டை ஒரு போதும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் யாப்பு உரையாடல்; ஏமாற்று நாடகம்- சபா.குகதாஸ் தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் யாப்பு என்ற உரையாடல் ஏமாற்று நாடகம் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவரால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கையில் முத்தரப்புப் போட்டியில் பெரும்பான்மை இல்லாமல் ஜனாதிபதி கதிரையை கைப்பற்றிய அநுரகுமார, பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை கைப்பற்ற கடந்த கால ஆட்சியாளர்கள் போன்று இனவாதத்தை கையில் எடுத்து தங்களின் உண்மை முகத்தை வெளிக்காட்ட தொடங்கி உள்ளனர்.சமஸ்டி என்ற பேச்சுக்கு இடமில்லை என்ற வெளிவிகார அமைச்சர் விஐித ஹேரத்தின் நிலைப்பாடு ஒற்றையாட்சியை தாண்டி அதிகாரப் பகிர்வினை புதிய அரசியல் அமைப்பின் மூலம் வழங்க தயார் இல்லை என்றால் தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் யாப்பு என்ற உரையாடல் ஏமாற்று நாடகம்.அதிகாரப்பகிர்வுக்கு இடம்  இல்லை என ரில்வின் சில்வா கூறியதும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் சில விடையங்களை மாற்றுவது பற்றி பேசுவதும் ஐ.நா மனிதவுரிமைப் பேரவையின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதும், யுத்த குற்ற ஆதாரங்களை சேகரிப்பதை ஏற்றுக் கொள்ளாமையும் , வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை எடுக்க முடியாது என கூறுவதும் மீனவர் பிரச்சினைக்கு தீர்க்க இந்தியாவை நோக்கி கை காட்டுவதும் கடந்த கால ஆட்சியாளரின் இனவாத செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவே ஜனாதிபதி அநுரகுமாரவின் நிலைப்பாடு வெளிப்பட ஆரம்பித்துள்ளது.எனவே, தென்னிலங்கை மாற்றம் என்பது வடக்கு கிழக்கு மாகாண தமிழர்களுக்கு ஏமாற்றமாகவும் வெறுமனே ஆட்சிமாற்றம் அல்ல ஆள் மாற்றமாகவே மாறியுள்ளது.இலங்கைத் தீவுக்குள் எரிந்து கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மாற்றம் என்ற கோசத்தில் நாட்டை ஒரு போதும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement