• Nov 23 2024

வடமேல் மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு ஆளுநர் வழங்கிய புதிய பதவி...!samugammedia

Sharmi / Dec 20th 2023, 11:31 am
image

புத்தளம் மாநகரசபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களுக்கான வடமேல் மாகாண ஆளுநரின் விஷேட இணைப்பாளராக முன்னாள் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் நியமிக்கப்பட்டுள்ளார். 

புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்களுக்கான விஷேட கூட்டம் நேற்று (19) மாகாண ஆளுநர்  லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே, வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வடமேல் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் அனைவரும் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் ஆளுநரின் விஷேட இணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.எம்.ரபீக் , புத்தளம் நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான ஆளுநரின் இணைப்பாளராக செயற்படுவார்.

அத்துடன், பொதுமக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்வது, ஆளுநரின் புத்தளம் விஜயத்தை ஒழுங்குபடுத்துவது,  அபிவிருத்தி திட்டங்களுக்கான திட்ட மொழிவுகளை முன்வைப்பது போன்ற பணிகள் ஆளுநரின் இணைப்பாளர்களுக்குரிய அதிகாரங்களாக வழங்கப்பட்டுள்ளன.

அத்தோடு, ஆளுநரின் இணைப்பாளர்களான உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்களுக்கு அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் அளவில் சிறிய அளவிலான அபிவிருத்தி பணிக்காக மாகாண ஆளுநரினால் 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மாவட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் அபிவிருத்தி பணிகளுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில், ஆளுநரின் இணைப்பாளர்களுக்கு அபிவிருத்தி பணிகளை செய்வதற்கு தனி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்களை சந்தித்துக் கலந்துரையாடிய மாகாண ஆளுநர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்திகொண்டார்.

இதன்போது, புத்தளம் நகர சபை ஆளுகைக்குற்பட்ட ஆளுநரின் இணைப்பாளரான புத்தளம் நகர சபையின் முன்னாள் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக், புத்தளத்தில் காணப்படும் வடிகாலமைப்பு பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்குமாறு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

அத்துடன், புத்தளம் வலயத்தில் உள்ள பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர்கள் மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறை என்பனவற்றையும் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்த மாகாண ஆளுநர், புத்தளத்தில் நீண்ட காலமாக காணப்படும் வடிகாலமைப்பு பிரச்சினைகள் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் கலந்துரையாடி அதனை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுப்பதாகவும் ஆளுநர் கூறியுள்ளார் என புத்தளம் நகர சபையின் முன்னாள் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் தெரிவித்தார்

வடமேல் மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு ஆளுநர் வழங்கிய புதிய பதவி.samugammedia புத்தளம் மாநகரசபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களுக்கான வடமேல் மாகாண ஆளுநரின் விஷேட இணைப்பாளராக முன்னாள் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் நியமிக்கப்பட்டுள்ளார். புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்களுக்கான விஷேட கூட்டம் நேற்று (19) மாகாண ஆளுநர்  லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.இதன்போதே, வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.மேலும், வடமேல் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் அனைவரும் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் ஆளுநரின் விஷேட இணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த நியமனம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இதன்படி, புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.எம்.ரபீக் , புத்தளம் நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான ஆளுநரின் இணைப்பாளராக செயற்படுவார்.அத்துடன், பொதுமக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்வது, ஆளுநரின் புத்தளம் விஜயத்தை ஒழுங்குபடுத்துவது,  அபிவிருத்தி திட்டங்களுக்கான திட்ட மொழிவுகளை முன்வைப்பது போன்ற பணிகள் ஆளுநரின் இணைப்பாளர்களுக்குரிய அதிகாரங்களாக வழங்கப்பட்டுள்ளன.அத்தோடு, ஆளுநரின் இணைப்பாளர்களான உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்களுக்கு அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் அளவில் சிறிய அளவிலான அபிவிருத்தி பணிக்காக மாகாண ஆளுநரினால் 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், மாவட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் அபிவிருத்தி பணிகளுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில், ஆளுநரின் இணைப்பாளர்களுக்கு அபிவிருத்தி பணிகளை செய்வதற்கு தனி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்களை சந்தித்துக் கலந்துரையாடிய மாகாண ஆளுநர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்திகொண்டார்.இதன்போது, புத்தளம் நகர சபை ஆளுகைக்குற்பட்ட ஆளுநரின் இணைப்பாளரான புத்தளம் நகர சபையின் முன்னாள் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக், புத்தளத்தில் காணப்படும் வடிகாலமைப்பு பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்குமாறு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.அத்துடன், புத்தளம் வலயத்தில் உள்ள பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர்கள் மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறை என்பனவற்றையும் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதுதொடர்பில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்த மாகாண ஆளுநர், புத்தளத்தில் நீண்ட காலமாக காணப்படும் வடிகாலமைப்பு பிரச்சினைகள் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் கலந்துரையாடி அதனை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுப்பதாகவும் ஆளுநர் கூறியுள்ளார் என புத்தளம் நகர சபையின் முன்னாள் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement