• Nov 23 2024

புதிய ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க வருவார் - தேசிய மக்கள் சக்தியின் கே.டி.லால் காந்த தெரிவிப்பு..!samugammedia

Tharun / Jan 25th 2024, 6:18 pm
image

இலங்கையின் புதிய ஜனாதிபதி எதிர்காலத்தில் அனுர குமார திஸநாயக்க வருவார் என்ற அச்சத்தில் அரசாங்கம் தேர்தலை நடாத்த பின்னிற்கின்றது என  தேசிய தொழில் சங்க சம்மேளனத்தின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினருமாகிய கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார். 

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் ஏற்பாட்டில் இடம்பெறும் 2024 ஆண்டிற்கான  அம்பாறை மாவட்ட மீனவர் மாநாடு  சாய்ந்தமருது மருதூர் சதுக்கத்தில் புதன்கிழமை(24) மாலை நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு தனதுரையில் குறிப்பிட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

மீனவர் சமூகம் சிங்களமாக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லீம் ஆக இருந்தாலும் ஏழைகள். விவசாய சமூகத்தை பார்த்தாலும் தமிழாக இருந்தாலும், சிங்களமாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் ஏழைகள், அரச ஊழியர்களை நாங்கள் பார்த்தாலும் சிங்களமாக இருந்தாலும், தமிழாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் இன்றைய நாளிலே ஒருநாள் சாப்பிடுவதற்கு கஷ்டப்படுகின்ற இனமாக இருக்கின்றது. 

இந்த இடத்தில எனக்கு விளங்குகின்றது  பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் கடமை செய்கின்றார்கள் அவர்களும் ஏழைகள். ஆகவே இந்த நாட்டிலே வேலை  செய்கின்ற சமூகம் கடந்த 76 வருடங்களாக ஏழைகளாக இருக்கின்றது.  ஆகவே தான் இந்த ஏழை சமூகத்தை உண்டு , உடுத்த அவர்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக இப்போது எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. அதற்காக எனக்ளுக்கு பல்வேறு பட்ட வேலைகள்  காணப்பட்டிருக்கின்றன.  

ஆகவே தான் இன்று இந்த மீனவ சமூகம் மீனவர்களையும், மீனவ சமூகம் அனைத்தையும் உருவாக்கி ஒரு குடையின் கீழ் கொண்டுவரக்கூடிய வேலை எங்களுக்கு இருக்கின்றது. 

அகில இலங்கை பொது மீனவ சம்மேளனமாக இருக்கின்ற எங்ககளினுடைய மீனவ சம்மேளனம்தான் எந்த ஆட்சி செய்தாலும்,  அந்த ஆட்சி செய்கின்ற அநீதிக்கு எதிராக எங்ககளினுடைய கோரிக்கைகளை வென்றெடுப்பதாகும்.  

அதே போல விவசாய சமூகத்தை எடுத்துக்கொண்டாலும் அந்த சமூகத்தையும் ஒன்றிணைத்து, இந்த விவசாய சமூகத்தை ஒன்றிணைத்து  அவர்களையும் கட்டியெழுப்பும் எல்லா வேலைகளும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

அதே போன்றுதான் அம்பாறை மாவட்டத்தில் இந்த விவசாய சமூகத்தை கட்டி எழுப்புகின்ற பணி  ஏற்படுத்தப்படுகிறது. 

அதே போன்றுதான் அரச ஊழியர்களாக இருக்கட்டும், தனியார் ஊழியர்களாக இருக்கட்டும் இந்த ஊழியர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து தொழிலாளர்  என்று அழைத்து அதற்கான வேலைகளும் நடைபெற இருக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க வருவார் - தேசிய மக்கள் சக்தியின் கே.டி.லால் காந்த தெரிவிப்பு.samugammedia இலங்கையின் புதிய ஜனாதிபதி எதிர்காலத்தில் அனுர குமார திஸநாயக்க வருவார் என்ற அச்சத்தில் அரசாங்கம் தேர்தலை நடாத்த பின்னிற்கின்றது என  தேசிய தொழில் சங்க சம்மேளனத்தின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினருமாகிய கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார். அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் ஏற்பாட்டில் இடம்பெறும் 2024 ஆண்டிற்கான  அம்பாறை மாவட்ட மீனவர் மாநாடு  சாய்ந்தமருது மருதூர் சதுக்கத்தில் புதன்கிழமை(24) மாலை நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு தனதுரையில் குறிப்பிட்டார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மீனவர் சமூகம் சிங்களமாக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லீம் ஆக இருந்தாலும் ஏழைகள். விவசாய சமூகத்தை பார்த்தாலும் தமிழாக இருந்தாலும், சிங்களமாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் ஏழைகள், அரச ஊழியர்களை நாங்கள் பார்த்தாலும் சிங்களமாக இருந்தாலும், தமிழாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் இன்றைய நாளிலே ஒருநாள் சாப்பிடுவதற்கு கஷ்டப்படுகின்ற இனமாக இருக்கின்றது. இந்த இடத்தில எனக்கு விளங்குகின்றது  பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் கடமை செய்கின்றார்கள் அவர்களும் ஏழைகள். ஆகவே இந்த நாட்டிலே வேலை  செய்கின்ற சமூகம் கடந்த 76 வருடங்களாக ஏழைகளாக இருக்கின்றது.  ஆகவே தான் இந்த ஏழை சமூகத்தை உண்டு , உடுத்த அவர்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக இப்போது எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. அதற்காக எனக்ளுக்கு பல்வேறு பட்ட வேலைகள்  காணப்பட்டிருக்கின்றன.  ஆகவே தான் இன்று இந்த மீனவ சமூகம் மீனவர்களையும், மீனவ சமூகம் அனைத்தையும் உருவாக்கி ஒரு குடையின் கீழ் கொண்டுவரக்கூடிய வேலை எங்களுக்கு இருக்கின்றது. அகில இலங்கை பொது மீனவ சம்மேளனமாக இருக்கின்ற எங்ககளினுடைய மீனவ சம்மேளனம்தான் எந்த ஆட்சி செய்தாலும்,  அந்த ஆட்சி செய்கின்ற அநீதிக்கு எதிராக எங்ககளினுடைய கோரிக்கைகளை வென்றெடுப்பதாகும்.  அதே போல விவசாய சமூகத்தை எடுத்துக்கொண்டாலும் அந்த சமூகத்தையும் ஒன்றிணைத்து, இந்த விவசாய சமூகத்தை ஒன்றிணைத்து  அவர்களையும் கட்டியெழுப்பும் எல்லா வேலைகளும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.அதே போன்றுதான் அம்பாறை மாவட்டத்தில் இந்த விவசாய சமூகத்தை கட்டி எழுப்புகின்ற பணி  ஏற்படுத்தப்படுகிறது. அதே போன்றுதான் அரச ஊழியர்களாக இருக்கட்டும், தனியார் ஊழியர்களாக இருக்கட்டும் இந்த ஊழியர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து தொழிலாளர்  என்று அழைத்து அதற்கான வேலைகளும் நடைபெற இருக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement