இலங்கை பொலிஸாரினால் வழங்கப்படும் சேவைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்கள், முறைப்பாடுகள், பாராட்டுக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக புதிய QR குறியீட்டு (QR Code) முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, “Sri Lanka Police Community Feedback Portal” என்ற பெயரில் புதிய இணையவழி டிஜிட்டல் தளம் (Online Digital Platform) ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மக்களை மையமாகக் கொண்ட, மிகவும் திறமையான பொலிஸ் சேவையை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் வரவேற்பு மற்றும் முறைப்பாட்டுப் பிரிவுகளுக்கு அருகில் இந்த QR குறியீட்டுப் பலகைகள் காட்சிப்படுத்தப்படும்.
பொலிஸின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள 'E-Services' பகுதிக்குச் சென்றும் இச்சேவையைப் பெறலாம். பொதுமக்கள் தங்களின் தேவைக்கேற்ப கருத்து, முறைப்பாடு, பாராட்டு அல்லது ஆலோசனை ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்து, சம்பவம் குறித்த விபரங்களை உள்ளீடு செய்யலாம். (தேவைப்பட்டால் தனிப்பட்ட விபரங்களையும் வழங்கலாம்).
இச்சேவை குறித்து பொலிஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துமாறும், அவர்களுக்கு வழிகாட்டுமாறும் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளுக்கும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் (OIC) கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொலிஸ் சேவைகள் குறித்து கருத்து தெரிவிக்க புதிய QR குறியீட்டு முறைமை அறிமுகம் இலங்கை பொலிஸாரினால் வழங்கப்படும் சேவைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்கள், முறைப்பாடுகள், பாராட்டுக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக புதிய QR குறியீட்டு (QR Code) முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய, “Sri Lanka Police Community Feedback Portal” என்ற பெயரில் புதிய இணையவழி டிஜிட்டல் தளம் (Online Digital Platform) ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மக்களை மையமாகக் கொண்ட, மிகவும் திறமையான பொலிஸ் சேவையை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் வரவேற்பு மற்றும் முறைப்பாட்டுப் பிரிவுகளுக்கு அருகில் இந்த QR குறியீட்டுப் பலகைகள் காட்சிப்படுத்தப்படும்.பொலிஸின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள 'E-Services' பகுதிக்குச் சென்றும் இச்சேவையைப் பெறலாம். பொதுமக்கள் தங்களின் தேவைக்கேற்ப கருத்து, முறைப்பாடு, பாராட்டு அல்லது ஆலோசனை ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்து, சம்பவம் குறித்த விபரங்களை உள்ளீடு செய்யலாம். (தேவைப்பட்டால் தனிப்பட்ட விபரங்களையும் வழங்கலாம்).இச்சேவை குறித்து பொலிஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துமாறும், அவர்களுக்கு வழிகாட்டுமாறும் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளுக்கும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் (OIC) கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.