• Aug 10 2025

ஐ.நாவின் 60ஆவது அமர்வில் இலங்கை குறித்து புதிய தீர்மானம்

Chithra / Aug 10th 2025, 11:10 am
image

 

அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் முன்வைக்கப்படும் என்று ஐக்கிய இராச்சியமும் கனடாவும் அறிவித்துள்ளன. 

இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், 60வது அமர்வில் "இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை" குறித்த தனது அறிக்கையை முன்வைப்பார். 

வரைவுத் திட்டத்தின்படி, அமர்வு தொடங்கும் நாளில், செப்டம்பர் 8 ஆம் திகதியன்று இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

உயர்ஸ்தானிகர் டர்க் ஏற்கனவே செம்மணிப் புதைகுழியைப் பார்வையிட்டுச் சென்றுள்ளமையால், இலங்கை குறித்த தனது அறிக்கையில் முக்கியமாக அந்த புதைகுழி இடம்பெற வாய்ப்புள்ளது. 

இதற்கிடையில் புதிய அரசாங்கம் கடந்த செப்டம்பரில் பதவியேற்றதிலிருந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  இலங்கை மீதான தீர்மானங்கள் மற்றும் சமர்ப்பிப்புகளில் நிலைப்பாடு மென்மையாக்கப்பட்டுள்ளதாக, இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

 

அதேநேரம் பொறுப்புக்கூறலை நிவர்த்தி செய்வதற்கான உள்நாட்டு செயல்முறை வலுப்படுத்தப்படுவதையும் அரசியல் தலையீடு இல்லாததையும் உறுதி செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஐ.நாவின் 60ஆவது அமர்வில் இலங்கை குறித்து புதிய தீர்மானம்  அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் முன்வைக்கப்படும் என்று ஐக்கிய இராச்சியமும் கனடாவும் அறிவித்துள்ளன. இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், 60வது அமர்வில் "இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை" குறித்த தனது அறிக்கையை முன்வைப்பார். வரைவுத் திட்டத்தின்படி, அமர்வு தொடங்கும் நாளில், செப்டம்பர் 8 ஆம் திகதியன்று இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. உயர்ஸ்தானிகர் டர்க் ஏற்கனவே செம்மணிப் புதைகுழியைப் பார்வையிட்டுச் சென்றுள்ளமையால், இலங்கை குறித்த தனது அறிக்கையில் முக்கியமாக அந்த புதைகுழி இடம்பெற வாய்ப்புள்ளது. இதற்கிடையில் புதிய அரசாங்கம் கடந்த செப்டம்பரில் பதவியேற்றதிலிருந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  இலங்கை மீதான தீர்மானங்கள் மற்றும் சமர்ப்பிப்புகளில் நிலைப்பாடு மென்மையாக்கப்பட்டுள்ளதாக, இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.  அதேநேரம் பொறுப்புக்கூறலை நிவர்த்தி செய்வதற்கான உள்நாட்டு செயல்முறை வலுப்படுத்தப்படுவதையும் அரசியல் தலையீடு இல்லாததையும் உறுதி செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement