• Jan 11 2025

மட்டக்களப்பில் புது வருடப்பிறப்பினை முன்னிட்டு : இந்து ஆலயங்களில் வழிபாடுகள் முன்னெடுப்பு

Tharmini / Jan 1st 2025, 4:14 pm
image

சீரற்ற காலநிலைக்கும் மத்தியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு இன்று (01) காலை முதல் இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதுவருட பூஜை சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் குரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்களின் தலைமையில் புதுவருட பிறப்பு சிறப்பு பூஜை இன்று காலை நடாத்தப்பட்டது.

இன்று (01)  விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று மாமாங்கேஸ்வரருக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்று புதுவருட சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

நாட்டில் பீடித்துள்ள துன்பங்கள் நீங்கி அரசாங்கம்,நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ ஆசிவேண்டி பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆலயத்தினால் புதிய ஆண்டினை குறிக்கும் வகையிலான பஞ்சாங்க நாட்காட்டியும் வெளியிட்டு வைக்கப்பட்டது.





மட்டக்களப்பில் புது வருடப்பிறப்பினை முன்னிட்டு : இந்து ஆலயங்களில் வழிபாடுகள் முன்னெடுப்பு சீரற்ற காலநிலைக்கும் மத்தியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு இன்று (01) காலை முதல் இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதுவருட பூஜை சிறப்பாக நடைபெற்றது.ஆலயத்தின் குரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்களின் தலைமையில் புதுவருட பிறப்பு சிறப்பு பூஜை இன்று காலை நடாத்தப்பட்டது.இன்று (01)  விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று மாமாங்கேஸ்வரருக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்று புதுவருட சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெற்றது.நாட்டில் பீடித்துள்ள துன்பங்கள் நீங்கி அரசாங்கம்,நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ ஆசிவேண்டி பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது ஆலயத்தினால் புதிய ஆண்டினை குறிக்கும் வகையிலான பஞ்சாங்க நாட்காட்டியும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement