பலாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், புத்தாண்டு தினமான இன்று தந்தையின் வாகனத்தில் விபத்துக்குள்ளாகி குழந்தை உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த லொரியை இயக்கி, வீட்டை விட்டு வெளியேறுவதற்காக பின்னால் எடுத்தபோது, வீட்டில் இருந்த குழந்தை லொறியின் பின்புற சக்கரத்தின் கீழ் நசுங்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த குழந்தை 01 வயது 07 மாத வயதுடையது எனவும் பலாங்கொட பகுதியை சேர்ந்த லொறி ஓட்டுநரின் மகன் எனவும் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை பலாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த குழந்தையின் 39 வயதான தந்தை பலாங்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தாண்டில் நடந்த துயரம்; தந்தை இயக்கிய லொறியின் சில்லில் சிக்கி குழந்தை பலி பலாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், புத்தாண்டு தினமான இன்று தந்தையின் வாகனத்தில் விபத்துக்குள்ளாகி குழந்தை உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த லொரியை இயக்கி, வீட்டை விட்டு வெளியேறுவதற்காக பின்னால் எடுத்தபோது, வீட்டில் இருந்த குழந்தை லொறியின் பின்புற சக்கரத்தின் கீழ் நசுங்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.உயிரிழந்த குழந்தை 01 வயது 07 மாத வயதுடையது எனவும் பலாங்கொட பகுதியை சேர்ந்த லொறி ஓட்டுநரின் மகன் எனவும் தெரிவிக்கப்பட்டது.விபத்தில் படுகாயமடைந்த குழந்தை பலாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.விபத்தில் உயிரிழந்த குழந்தையின் 39 வயதான தந்தை பலாங்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.