• Apr 02 2025

நுவரெலியா மாவட்டத்திற்கு புதிதாக 73 கிராம உத்தியோகத்தர்கள் நியமனம்...!

Sharmi / Jun 12th 2024, 11:50 am
image

நுவரெலியா மாவட்டத்திற்கு புதிதாக 73 கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான காலாண்டு பயிற்சி வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.

இப்பயிற்சி நிகழ்ச்சி தொடர் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடாத்தப்படவுள்ளதுடன், இதன் ஆரம்ப நிகழ்வு அண்மையில் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் இடம்பெற்றது.

புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் இந்தப் பயிற்சியின் பின்னர், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹகுரன்கெத்த, வலப்பனை, நுவரெலியா, கொத்மலை, அம்பகமுவ, தலவாக்கலை, நோர்வூட் ஆகிய பிரதேச செயலகங்களிலும், உப பிரதேச செயலகங்களிலும் காலியாக உள்ள கிராம உத்தியோகத்தர் களங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர். 


நுவரெலியா மாவட்டத்திற்கு புதிதாக 73 கிராம உத்தியோகத்தர்கள் நியமனம். நுவரெலியா மாவட்டத்திற்கு புதிதாக 73 கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான காலாண்டு பயிற்சி வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.இப்பயிற்சி நிகழ்ச்சி தொடர் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடாத்தப்படவுள்ளதுடன், இதன் ஆரம்ப நிகழ்வு அண்மையில் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் இடம்பெற்றது.புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் இந்தப் பயிற்சியின் பின்னர், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹகுரன்கெத்த, வலப்பனை, நுவரெலியா, கொத்மலை, அம்பகமுவ, தலவாக்கலை, நோர்வூட் ஆகிய பிரதேச செயலகங்களிலும், உப பிரதேச செயலகங்களிலும் காலியாக உள்ள கிராம உத்தியோகத்தர் களங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now