• May 19 2024

அடுத்த வருடம் அரசியலின் புதிய யுகம்..! - முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் அதிரடித் தகவல்

Chithra / Dec 8th 2023, 9:07 am
image

Advertisement

 

அடுத்த வருடம்  அரசியலின் புதிய யுகமாகும். புதிய ஆற்றல் கொண்ட குழுவினர்  அரசியலுக்கு வர வேண்டும். அரசியல் கசப்பானது என கருதிக் கொண்டு இந்த நாட்டை வலுவடைய செய்ய முடியாது என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

 மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் சக்தி மிக்கதாக காணப்பட்ட போதிலும்,   உரம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் பிழை எனவும் அதனை நீக்கி கொள்ள வேண்டும் எனவும் கூறினேன். 

அவர்கள் அது தொடர்பில் பொருட்படுத்தாமையாலேயே பதவி விலகுவதற்கு காரணமாக அமைந்தது.

மேலும் தற்போது பாராளுமன்றத்தில் இருக்கும் 225 பேரிலும் சரி, முன்பிருந்த 225 பேரிலும் சரி இலஞ்சம் பெறாத யாரும் இருக்கவில்லை.

இதன் காரணமாகவே இந்த நாட்டில் உள்ள மக்கள் இவ்வாறு துன்பப்படுகிறார்கள். இது கண்டிப்பாக மாற்றமடைய வேண்டும். 

அடுத்த வருடம்  அரசியிலின் புதிய யுகமாகும். இதற்கு அறிவான தெளிவான புதிய ஆற்றல் கொண்ட குழுவினர் அரசியலுக்கு வர வேண்டும். 

இவர்கள் தாம் கற்றுக் கொண்டதை வைத்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும். இவர்கள் இலங்கையில் இருக்க முடியும். அல்லது வெளிநாடுகளிலும் இருக்க முடியும்.என்றார்.

அடுத்த வருடம் அரசியலின் புதிய யுகம். - முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் அதிரடித் தகவல்  அடுத்த வருடம்  அரசியலின் புதிய யுகமாகும். புதிய ஆற்றல் கொண்ட குழுவினர்  அரசியலுக்கு வர வேண்டும். அரசியல் கசப்பானது என கருதிக் கொண்டு இந்த நாட்டை வலுவடைய செய்ய முடியாது என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் சக்தி மிக்கதாக காணப்பட்ட போதிலும்,   உரம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் பிழை எனவும் அதனை நீக்கி கொள்ள வேண்டும் எனவும் கூறினேன். அவர்கள் அது தொடர்பில் பொருட்படுத்தாமையாலேயே பதவி விலகுவதற்கு காரணமாக அமைந்தது.மேலும் தற்போது பாராளுமன்றத்தில் இருக்கும் 225 பேரிலும் சரி, முன்பிருந்த 225 பேரிலும் சரி இலஞ்சம் பெறாத யாரும் இருக்கவில்லை.இதன் காரணமாகவே இந்த நாட்டில் உள்ள மக்கள் இவ்வாறு துன்பப்படுகிறார்கள். இது கண்டிப்பாக மாற்றமடைய வேண்டும். அடுத்த வருடம்  அரசியிலின் புதிய யுகமாகும். இதற்கு அறிவான தெளிவான புதிய ஆற்றல் கொண்ட குழுவினர் அரசியலுக்கு வர வேண்டும். இவர்கள் தாம் கற்றுக் கொண்டதை வைத்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும். இவர்கள் இலங்கையில் இருக்க முடியும். அல்லது வெளிநாடுகளிலும் இருக்க முடியும்.என்றார்.

Advertisement

Advertisement

Advertisement