• Jan 10 2025

இரவு நேர களியாட்ட விடுதி திடீர் சுற்றிவளைப்பு! - சிக்கிய முக்கிய பொருள்

Chithra / Jan 3rd 2025, 3:09 pm
image

  

கடவத்தை நகரத்தில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (03) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

05 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களே கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இரவு நேர களியாட்ட விடுதி திடீர் சுற்றிவளைப்பு - சிக்கிய முக்கிய பொருள்   கடவத்தை நகரத்தில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (03) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.05 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களே கைப்பற்றப்பட்டுள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement