• Nov 24 2024

யாழ்ப்பாண சிறுமி உட்பட ஒன்பது பேர் மாயம்..! பொலிஸ் தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Jan 11th 2024, 11:31 am
image

 

இரண்டு வயது சிறுமி மற்றும் பாடசாலை மாணவி உட்பட 09 பேர்  நேற்று முன்தினம் (08) மற்றும் நேற்று (09) காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போன இரண்டு வயது சிறுமி வெலிபன்ன பத்தினியாகொட பகுதியைச் சேர்ந்தவராவார்.

குறித்த சிறுமியும் முப்பது வயதுடைய அவரது தாயாரும் கடந்த 9ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அந்த பெண் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தவர் என்று கூறப்படுகிறது.

இதேவேளை, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை நேற்று முதல் காணவில்லை என உறவினர்கள் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வரக்காபொல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபர், மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண், 

முல்லேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவர், தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், அம்பாறை கார்த்திவ் பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய  ஒருவரும் காணாமல் போயுள்ளனர்.

மேலும், மெதகம பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவரும் காணாமல் போயுள்ளதுடன், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


யாழ்ப்பாண சிறுமி உட்பட ஒன்பது பேர் மாயம். பொலிஸ் தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பு  இரண்டு வயது சிறுமி மற்றும் பாடசாலை மாணவி உட்பட 09 பேர்  நேற்று முன்தினம் (08) மற்றும் நேற்று (09) காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.காணாமல் போன இரண்டு வயது சிறுமி வெலிபன்ன பத்தினியாகொட பகுதியைச் சேர்ந்தவராவார்.குறித்த சிறுமியும் முப்பது வயதுடைய அவரது தாயாரும் கடந்த 9ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.அந்த பெண் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தவர் என்று கூறப்படுகிறது.இதேவேளை, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை நேற்று முதல் காணவில்லை என உறவினர்கள் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.வரக்காபொல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபர், மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண், முல்லேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவர், தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், அம்பாறை கார்த்திவ் பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய  ஒருவரும் காணாமல் போயுள்ளனர்.மேலும், மெதகம பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவரும் காணாமல் போயுள்ளதுடன், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement