• Apr 16 2026

நிபா வைரஸ் பரவல் - இலங்கையில் விசேட கண்காணிப்பு!

shanu / Feb 10th 2026, 5:31 pm
image


நிபா வைரஸ் பரவல் - இலங்கையில் விசேட கண்காணிப்பு!

 




உலகம் முழுவதும் சில நாடுகளில் பரவியுள்ள நிபா வைரஸ் தொடர்பில் இலங்கையின் சுகாதாரத் துறையினர் விசேட அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 


இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், எதிர்வரும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தரவுள்ள நிலையில், இந்தியாவில் பரவியுள்ளதாகக் கூறப்படும் நிபா வைரஸ் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 


 இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 


இந்தியாவில் இந்த வைரஸ் காரணமாக உயிரிழப்புகள் பதிவான உடனேயே சுகாதார அமைச்சு இது குறித்து அவதானம் செலுத்தியது. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். 


இது கடந்த கொவிட் (Covid-19) தொற்றைப் போன்றதல்ல, இது மிகவும் ஆபத்தானது. 

கடந்த 4 நாட்களில் மட்டும் 40,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். ஜனவரியில் 277,000 பேர் வருகை தந்து சாதனை படைத்துள்ளனர். எனவே, இந்த நேரத்தில் சுகாதார அமைச்சு மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. 


நிபா வைரஸ் என்பது பன்றிகள் மற்றும் வௌவால்கள் போன்ற விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒரு வைரஸ் ஆகும். வைரஸ் தொற்றிய உணவு மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கோ இது பரவலாம். உலக சுகாதார ஸ்தாபனம் இதனைத் தொற்றுநோயாக மாறக்கூடிய ஆபத்துள்ள முன்னுரிமை நோய்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது எனத் தெரிவித்தார். 

நிபா வைரஸ் பரவல் - இலங்கையில் விசேட கண்காணிப்பு நிபா வைரஸ் பரவல் - இலங்கையில் விசேட கண்காணிப்பு உலகம் முழுவதும் சில நாடுகளில் பரவியுள்ள நிபா வைரஸ் தொடர்பில் இலங்கையின் சுகாதாரத் துறையினர் விசேட அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், எதிர்வரும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தரவுள்ள நிலையில், இந்தியாவில் பரவியுள்ளதாகக் கூறப்படும் நிபா வைரஸ் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இந்த வைரஸ் காரணமாக உயிரிழப்புகள் பதிவான உடனேயே சுகாதார அமைச்சு இது குறித்து அவதானம் செலுத்தியது. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். இது கடந்த கொவிட் (Covid-19) தொற்றைப் போன்றதல்ல, இது மிகவும் ஆபத்தானது. கடந்த 4 நாட்களில் மட்டும் 40,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். ஜனவரியில் 277,000 பேர் வருகை தந்து சாதனை படைத்துள்ளனர். எனவே, இந்த நேரத்தில் சுகாதார அமைச்சு மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. நிபா வைரஸ் என்பது பன்றிகள் மற்றும் வௌவால்கள் போன்ற விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒரு வைரஸ் ஆகும். வைரஸ் தொற்றிய உணவு மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கோ இது பரவலாம். உலக சுகாதார ஸ்தாபனம் இதனைத் தொற்றுநோயாக மாறக்கூடிய ஆபத்துள்ள முன்னுரிமை நோய்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது எனத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement