• May 18 2024

நோயாளர் காவு வண்டி இல்லை - பறிபோன இளம் குடும்பத்தரின் உயிர்..! தமிழர் பகுதியில் சோகம் samugammedia

Chithra / Oct 18th 2023, 2:01 pm
image

Advertisement


 

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேரவில் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி இல்லாமையால் இளம் குடும்பத்தர் ஒருவரின் உயிர் காவுகொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 15ம் திகதி அப்பிரதேசத்தில் உயிரிழந்த சிதம்பரநாதன் வர்மக்குமாரின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றது. 

குறித்த மரண நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமது ஆதங்கத்தினை வெளியிட்டனர்.

மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரதேசமே வேரவில் பிரதேசமாகும். 

அம்மக்களின் வைத்திய தேவைகளை மிக நீண்ட ஆண்டுகளாக முன்னெடுக்கும் பிரதேச வைத்தியசாலைக்கு கடந்த 3 வருடங்களாக நோயாளர் காவு வண்டி இல்லை.

பதிலாக பொருத்தமற்ற வாகனம் ஒன்று தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த விபத்து இடம்பெற்ற போது, வாகன வசதி ஏதும் இல்லாமையால் விபத்துக்குள்ளான நபரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முடியாது போனது.

அதனால் 1990 வாகனத்தின் உதவியுடன் அழைத்து சென்றபோதிலும் உயிர் இடைநடுவில் பிரிந்தது. இவ்வாறான இழப்புக்களை இனியும் அனுமதிக்காதிருக்க எமது வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி ஒன்றை வழங்க வேண்டும்.

கற்பிணி பெண்களிற்கு அவசர சிகிச்சை வழங்க வேண்டி ஏற்பட்டால் மிக மோசமான சம்பவங்களும் நடைபெறும் அபாயம் உள்ளது. 

நாம் தொடர்ந்தும் அச்சத்துடன் இருக்கின்றோம் என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.


நோயாளர் காவு வண்டி இல்லை - பறிபோன இளம் குடும்பத்தரின் உயிர். தமிழர் பகுதியில் சோகம் samugammedia  கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேரவில் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி இல்லாமையால் இளம் குடும்பத்தர் ஒருவரின் உயிர் காவுகொள்ளப்பட்டுள்ளது.கடந்த 15ம் திகதி அப்பிரதேசத்தில் உயிரிழந்த சிதம்பரநாதன் வர்மக்குமாரின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றது. குறித்த மரண நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமது ஆதங்கத்தினை வெளியிட்டனர்.மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரதேசமே வேரவில் பிரதேசமாகும். அம்மக்களின் வைத்திய தேவைகளை மிக நீண்ட ஆண்டுகளாக முன்னெடுக்கும் பிரதேச வைத்தியசாலைக்கு கடந்த 3 வருடங்களாக நோயாளர் காவு வண்டி இல்லை.பதிலாக பொருத்தமற்ற வாகனம் ஒன்று தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.மேற்குறித்த விபத்து இடம்பெற்ற போது, வாகன வசதி ஏதும் இல்லாமையால் விபத்துக்குள்ளான நபரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முடியாது போனது.அதனால் 1990 வாகனத்தின் உதவியுடன் அழைத்து சென்றபோதிலும் உயிர் இடைநடுவில் பிரிந்தது. இவ்வாறான இழப்புக்களை இனியும் அனுமதிக்காதிருக்க எமது வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி ஒன்றை வழங்க வேண்டும்.கற்பிணி பெண்களிற்கு அவசர சிகிச்சை வழங்க வேண்டி ஏற்பட்டால் மிக மோசமான சம்பவங்களும் நடைபெறும் அபாயம் உள்ளது. நாம் தொடர்ந்தும் அச்சத்துடன் இருக்கின்றோம் என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement