• Nov 28 2024

ஹிருணிகாவுக்கு இன்றும் பிணை இல்லை - மனுவை பரிசீலிக்க தீர்மானம்

Chithra / Jul 11th 2024, 12:54 pm
image

 

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனுவை பரிசீலிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்த பிணை மனு கோரிக்கையை வரும் பதினைந்தாம் திகது விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த விண்ணப்பப்படிவத்திற்கு எதிராக சட்டமா அதிபர் எழுத்துமூல அறிக்கைகளை இன்று தாக்கல் செய்துள்ளார்.

இளைஞன் ஒருவரை கடத்திச் சென்றது தொடர்பான நீண்ட விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட கடூழிய தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி உயர் நீதிமன்றத்தில் இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹிருணிகாவுக்கு இன்றும் பிணை இல்லை - மனுவை பரிசீலிக்க தீர்மானம்  மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனுவை பரிசீலிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.அதன்படி, இந்த பிணை மனு கோரிக்கையை வரும் பதினைந்தாம் திகது விசாரிக்க உத்தரவிடப்பட்டது.இந்த விண்ணப்பப்படிவத்திற்கு எதிராக சட்டமா அதிபர் எழுத்துமூல அறிக்கைகளை இன்று தாக்கல் செய்துள்ளார்.இளைஞன் ஒருவரை கடத்திச் சென்றது தொடர்பான நீண்ட விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட கடூழிய தண்டனை விதித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.அதன்படி உயர் நீதிமன்றத்தில் இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement