• Nov 25 2024

நாடாளுமன்றத் தேர்தலில் 'சங்கு' சின்னம் வேண்டாம்- தமிழ் மக்கள் பொதுச் சபை கோரிக்கை..!

Sharmi / Sep 30th 2024, 9:09 am
image

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை நேரடியாகப் பங்கேற்காமல் இருக்க முடிவெடுத்துள்ளது. 

அதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பயன்படுத்திய சங்கு சின்னத்தை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் தமிழ் மக்கள் பொதுச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ் மக்கள் பொதுச் சபையின் கலந்துரையாடல் நேற்றையதினம்(29) திருகோணமலையில் நடைபெற்றது.

இதன்போதே குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினர், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது என்ற யோசனையை முன்வைத்தது. 

இந்நிலையில், இது தொடர்பில் முடிவெடுப்பதற்குத் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபை இரண்டு நாட்கள் கால அவகாசம் கோரியிருந்தது.

இது தொடர்பில் முடிவை எடுக்கும் முகமாக தமிழ் மக்கள் பொதுச் சபையின் கலந்துரையாடல் நேற்று திருகோணமலை, உப்புவெளியில் அமைந்துள்ள ஆயர் இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபையும், தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து ஒரு தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பை உருவாக்கி, பொது வேட்பாளரைக் களம் இறக்கின. 

எனினும், நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாகப் பங்கேற்பதில்லை என்று தமிழ் மக்கள் பொதுச் சபை முடிவு எடுத்துள்ளது.

மேலும், பொதுச் சின்னமாகிய சங்கு சின்னத்தை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் கேட்பது என்றும் தமிழ் மக்கள் பொதுச் சபை தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் 'சங்கு' சின்னம் வேண்டாம்- தமிழ் மக்கள் பொதுச் சபை கோரிக்கை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை நேரடியாகப் பங்கேற்காமல் இருக்க முடிவெடுத்துள்ளது. அதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பயன்படுத்திய சங்கு சின்னத்தை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் தமிழ் மக்கள் பொதுச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.தமிழ் மக்கள் பொதுச் சபையின் கலந்துரையாடல் நேற்றையதினம்(29) திருகோணமலையில் நடைபெற்றது.இதன்போதே குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினர், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது என்ற யோசனையை முன்வைத்தது. இந்நிலையில், இது தொடர்பில் முடிவெடுப்பதற்குத் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபை இரண்டு நாட்கள் கால அவகாசம் கோரியிருந்தது.இது தொடர்பில் முடிவை எடுக்கும் முகமாக தமிழ் மக்கள் பொதுச் சபையின் கலந்துரையாடல் நேற்று திருகோணமலை, உப்புவெளியில் அமைந்துள்ள ஆயர் இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது.கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபையும், தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து ஒரு தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பை உருவாக்கி, பொது வேட்பாளரைக் களம் இறக்கின. எனினும், நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாகப் பங்கேற்பதில்லை என்று தமிழ் மக்கள் பொதுச் சபை முடிவு எடுத்துள்ளது.மேலும், பொதுச் சின்னமாகிய சங்கு சின்னத்தை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் கேட்பது என்றும் தமிழ் மக்கள் பொதுச் சபை தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement