சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க் கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
அத்துடன், குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு அறிவித்துள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணைக்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே கஜேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை. பெருகும் ஆதரவு. விவாதத்திற்கு நாள் குறிப்பு. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க் கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.அத்துடன், குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு அறிவித்துள்ளது.இவ்வாறானதொரு நிலையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணைக்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.முல்லைத்தீவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே கஜேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.