• Sep 09 2024

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை...! திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட புதிய தகவல்...!

Sharmi / Mar 5th 2024, 8:58 am
image

Advertisement

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லா பிரேரணை இன்றையதினம்  பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதியை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளோம்.

முன்னதாக உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த திருத்தங்களை உரிய முறையில் மேற்கொள்ளாது இணையவழி கட்டுப்பாட்டு சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் இதனை சுட்டிக்காட்டிய போதும் அதனை சட்டமாக்கும் சபையில் சபாநாயகர் கையெழுத்திட்டதாகவும் அந்த கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இதன் காரணமாகவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளது என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை. திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட புதிய தகவல். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லா பிரேரணை இன்றையதினம்  பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதியை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளோம்.முன்னதாக உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த திருத்தங்களை உரிய முறையில் மேற்கொள்ளாது இணையவழி கட்டுப்பாட்டு சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.அத்துடன் இதனை சுட்டிக்காட்டிய போதும் அதனை சட்டமாக்கும் சபையில் சபாநாயகர் கையெழுத்திட்டதாகவும் அந்த கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.இதன் காரணமாகவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளது என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement