அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் உரையாற்றிய வசந்த சமரசிங்க,
ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எந்தவொரு அரசாங்க வீட்டையும் பயன்படுத்துவதில்லை.
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளை ஒப்படைத்துள்ளார்கள், எங்கள் அமைச்சர்கள் யாரும் வீடுகள் கேட்கவில்லை,
உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளின் போது தங்குவதற்கு மாதிவெல குடியிருப்பு வளாகத்தில் வீடு வழங்கப்படுகிறது.
சம்பளம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரித்துடைய ஒன்று, ஆனால் ஓய்வூதியம் கண்டிப்பாக ஒழிக்கப்படும் என்றார்.
மேலும், தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை குறைக்கும் நடவடிக்கையில், அமைச்சர்களுக்கு அரச பங்களாக்களை ஒதுக்காது இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
எம்.பி.க்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் வரியில்லா வாகன அனுமதிகளும் ரத்து செய்யப்படும்.
கடந்த அரசாங்கங்களில் பதவி வகித்த அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரச பங்களாக்களை என்ன செய்வது என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும் என தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் எந்த அமைச்சருக்கும் இந்த வீடுகளை நாங்கள் ஒதுக்க மாட்டோம், என்று அவர் கூறினார்.
அமைச்சர்களுக்கு இனி பங்களாக்கள் இல்லை; ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் விரைவில் - அநுர அரசின் அதிரடி அறிவிப்பு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அங்கு மேலும் உரையாற்றிய வசந்த சமரசிங்க,ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எந்தவொரு அரசாங்க வீட்டையும் பயன்படுத்துவதில்லை.முன்னாள் அமைச்சர்கள் வீடுகளை ஒப்படைத்துள்ளார்கள், எங்கள் அமைச்சர்கள் யாரும் வீடுகள் கேட்கவில்லை, உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளின் போது தங்குவதற்கு மாதிவெல குடியிருப்பு வளாகத்தில் வீடு வழங்கப்படுகிறது.சம்பளம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரித்துடைய ஒன்று, ஆனால் ஓய்வூதியம் கண்டிப்பாக ஒழிக்கப்படும் என்றார்.மேலும், தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை குறைக்கும் நடவடிக்கையில், அமைச்சர்களுக்கு அரச பங்களாக்களை ஒதுக்காது இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.எம்.பி.க்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் வரியில்லா வாகன அனுமதிகளும் ரத்து செய்யப்படும்.கடந்த அரசாங்கங்களில் பதவி வகித்த அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரச பங்களாக்களை என்ன செய்வது என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும் என தெரிவித்தார்.தற்போதைய அரசாங்கத்தின் எந்த அமைச்சருக்கும் இந்த வீடுகளை நாங்கள் ஒதுக்க மாட்டோம், என்று அவர் கூறினார்.