• Sep 21 2024

இனப்பிரச்சினை தீர்வுக்கான திட்டங்கள் தமிழ் தரப்பு உள்ளிட்ட எவரிடமும் இல்லை - அனந்தி சசிதரன்

Chithra / Dec 26th 2022, 8:50 am
image

Advertisement

தமிழ் மக்களின் 70 வருட காலத்துக்கு மேற்பட்ட இனப்பிரச்சினையை ஒருசில மாதங்களுக்குள் தீர்த்துவிட முடியாதெனவும், இனப்பிரச்சினை தீர்வுக்கான திட்டங்கள் தமிழ் தரப்பு உள்ளிட்ட எவரிடமும் இல்லை எனவும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகப் பொதுச் செயலளரும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தலைமைகளின் பங்களிப்புடன் மாத்திரம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்த்துவிடமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அதிபருடனான இனப்பிரச்சினை தீர்வு பேச்சுவார்த்தை மற்றும் உள்ளூராட்சி தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இனப்பிரச்சினை தீர்வுக்கான திட்டங்கள் தமிழ் தரப்பு உள்ளிட்ட எவரிடமும் இல்லை - அனந்தி சசிதரன் தமிழ் மக்களின் 70 வருட காலத்துக்கு மேற்பட்ட இனப்பிரச்சினையை ஒருசில மாதங்களுக்குள் தீர்த்துவிட முடியாதெனவும், இனப்பிரச்சினை தீர்வுக்கான திட்டங்கள் தமிழ் தரப்பு உள்ளிட்ட எவரிடமும் இல்லை எனவும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகப் பொதுச் செயலளரும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தலைமைகளின் பங்களிப்புடன் மாத்திரம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்த்துவிடமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, அதிபருடனான இனப்பிரச்சினை தீர்வு பேச்சுவார்த்தை மற்றும் உள்ளூராட்சி தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement