• Sep 21 2024

இலங்கையில் மீண்டும் குறையும் எரிபொருள் விலை..? பயன்பாடு தொடர்பில் வெளியான தகவல்!

Chithra / Dec 26th 2022, 9:11 am
image

Advertisement


நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஆண்டு இறுதிக்குள் எரிபொருள் தேவை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடி, நுகர்வு கணிசமான அளவு குறைவு, QR முறைப்படி மட்டும் எரிபொருளை விடுவித்தல், எரிபொருள் இருப்புக்களை பராமரிக்க நுகர்வோர்கள் முயற்சி எடுக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் எரிபொருளின் தேவை குறைந்துள்ளது.

முன்னதாக மாதாந்தம் சுமார் 4000 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் டீசல் தேவை இருந்த நிலையில் தற்போது அது 2000 மெற்றிக் தொன்களாக குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.


கடந்த மார்ச் முதல் ஜூலை வரையிலான 4 மாத காலத்தில் தினசரி டீசல் பயன்பாடு 6,496 லிருந்து 2,299 தொன்னாகவும், பெற்றோல் பயன்பாடு 3,764 லிருந்து 1,226 தொன்னாகவும் குறைந்துள்ளது.

அதனுடன் ஒப்பிடும் போது, ​​வருட இறுதியில் நாட்டில் எரிபொருளுக்கான தேவை மேலும் குறைந்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் ஈட்டியுள்ளதுடன், உலக சந்தையில் எரிபொருள் விலையும் கணிசமான அளவு குறைந்துள்ளது.

இலங்கையில் உரிய எரிபொருள் விலை குறைப்புடன் ஒப்பிடும் போது ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை 50 முதல் 100 ரூபா வரை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கையில் மீண்டும் குறையும் எரிபொருள் விலை. பயன்பாடு தொடர்பில் வெளியான தகவல் நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு ஜனவரி முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஆண்டு இறுதிக்குள் எரிபொருள் தேவை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.பொருளாதார நெருக்கடி, நுகர்வு கணிசமான அளவு குறைவு, QR முறைப்படி மட்டும் எரிபொருளை விடுவித்தல், எரிபொருள் இருப்புக்களை பராமரிக்க நுகர்வோர்கள் முயற்சி எடுக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் எரிபொருளின் தேவை குறைந்துள்ளது.முன்னதாக மாதாந்தம் சுமார் 4000 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் டீசல் தேவை இருந்த நிலையில் தற்போது அது 2000 மெற்றிக் தொன்களாக குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.கடந்த மார்ச் முதல் ஜூலை வரையிலான 4 மாத காலத்தில் தினசரி டீசல் பயன்பாடு 6,496 லிருந்து 2,299 தொன்னாகவும், பெற்றோல் பயன்பாடு 3,764 லிருந்து 1,226 தொன்னாகவும் குறைந்துள்ளது.அதனுடன் ஒப்பிடும் போது, ​​வருட இறுதியில் நாட்டில் எரிபொருளுக்கான தேவை மேலும் குறைந்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் ஈட்டியுள்ளதுடன், உலக சந்தையில் எரிபொருள் விலையும் கணிசமான அளவு குறைந்துள்ளது.இலங்கையில் உரிய எரிபொருள் விலை குறைப்புடன் ஒப்பிடும் போது ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை 50 முதல் 100 ரூபா வரை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement