நாட்டின் முன்பள்ளி கட்டமைப்பில் முறையாக பயிற்சி பெற்ற 6,000 ஆசிரியர்கள் மாத்திரமே உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
19,000 முன்பள்ளிகளில் 34,000 ஆசிரியர்கள் முன்பிள்ளை பருவ அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ள போதிலும், அவர்கள் முறையான பயிற்சிகள் எதனையும் பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போது முன்பிள்ளை பருவ அபிவிருத்திக்காக இயங்கிவரும் அனைத்து முன்பள்ளிகளும் தேசிய கல்விக் கொள்கைக்கு அமைவாக பொதுவான கட்டமைப்பில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல் நாட்டின் முன்பள்ளி கட்டமைப்பில் முறையாக பயிற்சி பெற்ற 6,000 ஆசிரியர்கள் மாத்திரமே உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.19,000 முன்பள்ளிகளில் 34,000 ஆசிரியர்கள் முன்பிள்ளை பருவ அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ள போதிலும், அவர்கள் முறையான பயிற்சிகள் எதனையும் பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எனவே, தற்போது முன்பிள்ளை பருவ அபிவிருத்திக்காக இயங்கிவரும் அனைத்து முன்பள்ளிகளும் தேசிய கல்விக் கொள்கைக்கு அமைவாக பொதுவான கட்டமைப்பில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.