• Oct 04 2024

மத அரசியலை செய்யும் விக்கினேஸ்வரன் - செல்வநாயகம் நேசன் தெரிவிப்பு..!samugammedia

Tharun / Jan 28th 2024, 5:27 pm
image

Advertisement

முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கின்னேஸ்வரன் மதம் சார்பான அரசியலை செய்வதாக தமிழ் தேசிய மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  செல்வநாயகம் நேசன்  தெரிவித்துள்ளார். 

இன்று புத்தளத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர்  மேலும் தெரிவிக்கையில், 

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ் மக்கள் கூட்டணி விக்கினேஸ்வரன் தலைமையிலான கட்சி அவர்கள் சொல்கிறார்கள் சுமந்திரன் அவர்கள் வென்றிருந்தால் கிறீஸ்தவ மெதடிஸ்த ஆலயத்துக்கு சென்று வணக்கத்தை செலுத்தியிருப்பார். ஸ்ரீதரன் வென்றதால் காளியம்மா கோவிலுக்கு சென்று அவருடைய வணக்க வழிபாட்டை வெளியிட்டார் என்று ஒரு மதத்துவ ரீதியான அடிப்படை பதிவை வெளியிட்டுள்ளீர்கள்.

உண்மையில் தென்னிலங்கை இனவாத அரசியல் காட்சிகள் செய்வதும் வடக்கில் நீங்கள் செய்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

தென்னிலங்கையில் சிங்கள பிரிவினைவாத அரசியல் பௌத்த மயப்படுத்தப்படல் என்று ஒரு பிரிவினைவாதத்தை முன்னெடுப்பதைப்போல விக்கினேஸ்வரன் தலைமையிலான அந்த கட்டமைப்பு ஒரு அரசியலை கொண்டு போவதை காணக்கூடியதாக இருக்கிறது. தமிழ் தேசிய அரசியலில் முற்றுமுழுதாக மத அரசியல் களையப்படவேண்டிய ஒன்று.

இதில்  இஸ்லாமிய தரப்பினர் சார்பில் முக்கியமான ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றோம்.  தமிழ் தேசிய அரசியலில் எத்தகைய உரிமைப்பாடுகள் கிறீஸ்தவத் தமிழர்களுக்கு இருக்கின்றதோ அதே உரிமை இஸ்லாமிய தமிழர்களுக்கும் இருக்கின்றது. இஸ்லாமியர்கள் என்ற வேற்றுப்பிரிவாக ஒதுக்கி வைத்து பார்த்த காலம் போதும் . அவர்களும் தமிழர்கள் தான். அவர்களுக்கும் தமிழ் தேசிய அரசியலில் சம உரிமையை பெற்றுக்கொடுக்கும் வரை தமிழ் தேசிய மக்கள் இயக்கம் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மத அரசியலை செய்யும் விக்கினேஸ்வரன் - செல்வநாயகம் நேசன் தெரிவிப்பு.samugammedia முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கின்னேஸ்வரன் மதம் சார்பான அரசியலை செய்வதாக தமிழ் தேசிய மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  செல்வநாயகம் நேசன்  தெரிவித்துள்ளார். இன்று புத்தளத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர்  மேலும் தெரிவிக்கையில், அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ் மக்கள் கூட்டணி விக்கினேஸ்வரன் தலைமையிலான கட்சி அவர்கள் சொல்கிறார்கள் சுமந்திரன் அவர்கள் வென்றிருந்தால் கிறீஸ்தவ மெதடிஸ்த ஆலயத்துக்கு சென்று வணக்கத்தை செலுத்தியிருப்பார். ஸ்ரீதரன் வென்றதால் காளியம்மா கோவிலுக்கு சென்று அவருடைய வணக்க வழிபாட்டை வெளியிட்டார் என்று ஒரு மதத்துவ ரீதியான அடிப்படை பதிவை வெளியிட்டுள்ளீர்கள்.உண்மையில் தென்னிலங்கை இனவாத அரசியல் காட்சிகள் செய்வதும் வடக்கில் நீங்கள் செய்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தென்னிலங்கையில் சிங்கள பிரிவினைவாத அரசியல் பௌத்த மயப்படுத்தப்படல் என்று ஒரு பிரிவினைவாதத்தை முன்னெடுப்பதைப்போல விக்கினேஸ்வரன் தலைமையிலான அந்த கட்டமைப்பு ஒரு அரசியலை கொண்டு போவதை காணக்கூடியதாக இருக்கிறது. தமிழ் தேசிய அரசியலில் முற்றுமுழுதாக மத அரசியல் களையப்படவேண்டிய ஒன்று.இதில்  இஸ்லாமிய தரப்பினர் சார்பில் முக்கியமான ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றோம்.  தமிழ் தேசிய அரசியலில் எத்தகைய உரிமைப்பாடுகள் கிறீஸ்தவத் தமிழர்களுக்கு இருக்கின்றதோ அதே உரிமை இஸ்லாமிய தமிழர்களுக்கும் இருக்கின்றது. இஸ்லாமியர்கள் என்ற வேற்றுப்பிரிவாக ஒதுக்கி வைத்து பார்த்த காலம் போதும் . அவர்களும் தமிழர்கள் தான். அவர்களுக்கும் தமிழ் தேசிய அரசியலில் சம உரிமையை பெற்றுக்கொடுக்கும் வரை தமிழ் தேசிய மக்கள் இயக்கம் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement